"குப்பை வரி" விதிக்க வேண்டும் என்று பேசிய குஷ்பு... டெண்டருக்கு ஐடியாவா? என - பிடிஆர் பதிலடி !

2 days ago 1
ARTICLE AD

மதுரை மத்திய சட்ட மன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிவேல்தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் மைக்கில் பேசுகையில்..,

சினிமா சங்கி" என்ற வேட்பாளர் கபட வேடம் போட்டு நிறுத்தப்பட்டுள்ளார்.

"என் அருமை தோழமை கட்சி நண்பர்களே, கழக நிர்வாகிகளே, உடன்பிறப்புகளே மற்றும் என் சகோதரர் கிரம்மர் சுரேஷ் ஆகியோருக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அரசியல் வாழ்க்கையில் எப்போதும் கொள்கை, கழகத்தின் செயல்பாடு மற்றும் ஆட்சியில் செய்த சாதனைகள் பற்றியே பேசிப் பழக்கம். இதற்குச் சான்றாகச் சென்ற தேர்தலில் வேட்பாளராக நின்ற கிரம்மர் சுரேஷ் பற்றி ஒரு வார்த்தை கூட நான் தவறாகப் பேசவில்லை. ஆனால், மதுரை மத்திய தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் "சினிமா சங்கி" என்ற வேட்பாளர் கபட வேடம் போட்டு நிறுத்தப்பட்டுள்ளார். மதுரையுடன் எந்தச் சம்பந்தமும் இல்லாத இவர் கோயம்புத்தூரில் பிறந்து சென்னையில் வசிப்பவர்; இவரைப் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் ஒரு நடிகராக இங்கே இறக்கியுள்ளார். வேட்பாளரின் மனைவி கடந்த 15-20 ஆண்டுகளில் திமுக, பாஜக, காங்கிரஸ் என மூன்று கட்சிகள் மாறியவர். தற்போது நான்காவது கட்சியான ஏ.சி. சண்முகத்தின் கட்சி வழியாக ஐந்தாவது சின்னமான அதிமுகவில் இந்த வேட்பாளர் போட்டியிடுகிறார். தான் வெற்றி பெற்றால் மதுரையில் வெறும் 15 நாட்கள் மட்டுமே இருப்பேன் என்று அவர் வெளிப்படையாகக் கூறுகிறார்.

செப்டம்பர் 17-ஆம் தேதி குடமுழக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

வேட்பாளர் வந்தவுடன் முதலில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்குச் சென்றார். அவருக்கு ஒரு உறுப்பினரின் கடமைகள், சட்டம் அல்லது தொகுதி பற்றி எந்தப் புரிதலும் இல்லை. இயக்குனர் பார்த்திபன் குமார் கற்றுக்கொடுத்தபடி, எல்லா இடத்திலும் "இது சரியில்லை" என்று மட்டும் டயலாக் பேசி வருகிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பார்த்து அழுவதாகக் கூறும் அவர், அதன் வரலாற்றைப் படிக்க வேண்டும். 2018-இல் அதிமுக ஆட்சியில் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு 2021 வரை எந்தப் பணியும் நடக்கவில்லை. தற்போது 35 கோடி ரூபாய் செலவில் வீரவசந்தராயர் மண்டபம் கட்டப்பட்டு வருகிறது; இதற்காக ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலிருந்து கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. செப்டம்பர் 17-ஆம் தேதி குடமுழக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பொய் புகார்

கோவில் பகுதியில் எனது நிதியிலிருந்து மூன்று மடங்கு கூடுதல் கழிப்பறைகளைக் கட்டியுள்ளேன்; ஆனால் எதுவும் தெரியாத இந்த வேட்பாளர் பொய் புகார் கூறுகிறார். பணம் பெற்றுக்கொண்டு வேட்பாளருக்கு ஆதரவாகச் செய்திகளைப் பரப்பும் தீய சக்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். எனது 10 ஆண்டுப் பணியில் தொகுதியில் ஒவ்வொரு 500 மீட்டரிலும் ஏதேனும் ஒரு திட்டப்பணி (சமுதாயக் கூடம், சாலை, பள்ளிக் கட்டடம்) இருப்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்த வேட்பாளர் 11-ஆம் வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சி பெற்றவர், 12-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர் என்பதால் இவருக்கு எதையும் படித்துப் புரிந்துகொள்ளும் அறிவு இல்லை.

தீய சக்திகளை டெபாசிட் இழக்கச் செய்வது உங்கள் கடமை.

மதுரையின் சாக்கடைப் பிரச்னைக்கு 3,500 கோடி ரூபாய்க்குத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, 400 கோடி ரூபாய்க்கு முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். வேட்பாளரின் மனைவி முன்னதாக ஒரு கருத்தரங்கில் மக்கள் மீது "குப்பை வரி" விதிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்; எம்எல்ஏ ஆகிவிட்டால் டெண்டர் எடுப்பதற்காகவே இவர்கள் இவ்வாறு திட்டமிடுகிறார்கள். மதுரை மக்கள் முட்டாள்கள் இல்லை, அவர்கள் சுயமரியாதை உள்ளவர்கள். தொகுதியின் எல்லைகள் அல்லது பள்ளிக்கூடங்கள் பற்றித் தெரியாமல் பொய்களை மட்டுமே கூறி வரும் இவர்களை மதுரை மண் ஏற்காது. மதுரையின் சுயமரியாதையைக் காக்க இந்தத் தீய சக்திகளை டெபாசிட் இழக்கச் செய்வது உங்கள் கடமை.

Read Entire Article