குண்டர் சட்டத்தில் மயிலாடுதுறை பெண் கைது! - காரணம் இதுதான்...!

5 months ago 5
ARTICLE AD

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் காவல் சரகம் மேலச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான செல்வி. இவர் தொடர்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் இவர்மீது உள்ள நிலையில் தற்போது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கையும் களவுமாக சிக்கிய பெண்

கடந்த ஜூன் 10, 2025 தேதி அன்று, செல்வி தனது வீட்டின் வடபுறம் உள்ள திருநகரி வாய்க்கால் தென்கரையில், எவ்வித அரசு அனுமதியோ உரிமமோ இன்றி, சுமார் 150 லிட்டர் பாண்டி சாராயத்தை விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தி, விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்று செல்வியை கைது செய்தார். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு அனுப்பியுள்ளார்.

பெண் மீது தடுப்புக் காவல் சட்டம் பாய காரணம்

இந்நிலையில் செல்வி மீது வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் ஏற்கனவே மூன்று மதுவிலக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வருவதால், இவரால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கப்படும் எனக் கருதப்பட்டது. இதன் காரணமாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.ஸ்டாலின் செல்வி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.

கடலூர் சிறையில் அடைப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த், செல்வியை தடுப்புக் காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி உமா (பொறுப்பு) மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய காவலர்கள், வழக்கின் எதிரியான செல்வியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்புக் காவல் சட்டத்தில் 25 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில், தொடர்ந்து நடப்பாண்டில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள் மீது தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்து வருகிறது. அந்த வகையில் இதுவரை, பின்வரும் பிரிவுகளில் மொத்தம் 25 நபர்கள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் பங்கம் விளைவித்தவர்கள்: 12 நபர்கள்

திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்கள்: 03 நபர்கள்

மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவர்கள்: 08 நபர்கள்

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்: 01 நபர்

கஞ்சா விற்பனை குற்றங்களில் ஈடுபட்டவர்கள்: 01 நபர் என

கடந்த ஆறு மாதங்களில் மட்டும், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 8 நபர்கள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, மாவட்ட நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கையைக் காட்டுகிறது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த கைதுகள் உறுதிப்படுத்துகின்றன.

காவல் கண்காணிப்பாளரின்  எச்சரிக்கை

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா. ஸ்டாலின், கடுமையாக எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 47 நபர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறை எடுத்து வரும் தீவிர முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழலை உறுதி செய்ய, காவல்துறை தொடர்ந்து விழிப்புடனும், உறுதியுடனும் செயல்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Read Entire Article