“குடும்பத்தோட ஹாலிடே போறீங்களா? தேக்கடி ட்ரீ ஹவுஸ் அனுபவம் மிஸ் பண்ணாதீங்க!”

1 month ago 7
ARTICLE AD

மூணாறு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேக்கடி மர வீடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இடம் தான் மூணார் ஹாலிடேஸ். கொச்சின் விமான நிலையத்திலிருந்து மூணாறு நகர பகுதியில் உள்ள மூணார் ஹாலிடேஸ் ரிசார்ட்டை அடைய சுமார் 4.5 மணிநேரம் ஆகும். இங்கிருந்து, காலை விமானம் மூலம் பயணம் செய்யலாம். இங்கு வருபவர்கள் மூணாறுக்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு விமான நிலையத்தை அடைந்ததும் அங்கிருக்கும் பணியாளர்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்பர்.

மூணாறு செல்லும் வழி

சீயப்பாரா மற்றும் வாலாரா போன்ற நீர்வீழ்ச்சிகள் வழியாக மூணாறுக்குச் செல்லும் பாதை உள்ளது. கடைசி 30 கி.மீ. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் மிகவும் அழகிய பயணமாகும். மூணாரின் அழகை ரசித்து, மூணாரின் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க மூணார் ஹாலிடேஸ் போன்ற ரிசார்ட்டுகளில் தங்கலாம். மூணாரில் எங்கும் நிறைந்திருக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் நடந்து ரிலாக்ஸ் செய்யலாம், காலை உணவுக்குப் பிறகு மூணாறில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுடன் அன்றைய நாளை கொண்டாடலாம்.

ட்ரீஹவுஸ் (ஒரு மர வீடு)

மூணாற்றிலிருந்து திரும்பும் சுற்றுலா பயணிகள் தேக்கடியில் உள்ள ட்ரீஹவுஸில் தங்கலாம். மூணாறில் குளிர்ந்த காற்றுடன் இயற்கையான ரம்மியமான இரவு பொழுதை கழித்த பின் காலை உணவுக்குப் பிறகு, மூணாறிலிருந்து கிளம்பி தேக்கடிக்குச் சென்று தேக்கடியில் உள்ள ஒரு மர ட்ரீஹவுஸில் தங்கலாம். பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு அருகில் 8 ஏக்கர் அடர்ந்த காடுகளில் அமைந்துள்ள ஒரு ட்ரீஹவுஸ் தேக்கடியில் வனப்பகுதியில் உள்ளது. ட்ரீஹவுஸை சென்றடைய காடுகளுக்குள் மலையேற்றம் மூலம் மட்டுமே செல்ல முடியும், குறிப்பாக ட்ரீஹவுஸ்க்கு செல்வோர்கள் மாலை 5 மணிக்கு முன் ட்ரீஹவுஸை அடைய வேண்டும்.

இங்கு காட்டெருமைகள், பன்றிகள் மற்றும் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வருவோர்களை  வரவேற்கத் தயாராக இருக்கும். ட்ரீஹவுஸ்க்கு செல்லும் வழி உங்களுக்கு ஆச்சரியமான நடைப்பயணத்தை வழங்கக்கூடும்.  நடை பயணத்தின் போது காடுகளின் அழகிய இயற்கையின் அற்புதமான நறுமணத்தை அனுபவிக்கலாம். செல்லும் வழியில்  இனிமையான இயற்கை ஊற்று நீரில் குளித்து மகிழலாம். காற்று மற்றும் சூரிய சக்தியால் உருவாக்கப்படும் ஒரே ஆற்றல் வளங்கள். இயற்கையுடன் நெருங்கிச் சென்று, யாம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளால் ஆன கவர்ச்சிகரமான உள்ளூர் உணவு வகைகளை உண்டு மகிழலாம்.

ட்ரீஹவுஸ் அனுபவம்

தேக்கடியில் உள்ள ட்ரீஹவுஸில் இரவு தங்க, தேக்கடியில் ஒரு நாள் முழுவதும் சாகச பயணத்திற்கும் அனுபவத்திற்கும் தயாராகலாம். காலை முதல் மாலை வரை நடைபெறும் நிகழ்ச்சி. ரிசார்ட்டில் இருந்து அதிகாலையில் தொடங்கி தேக்கடி ஏரிக்கரையிலிருந்து காட்டுக்குள் 45 நிமிட மலையேற்றத்தைத் தொடங்க வேண்டும், அங்கு வனக் காவலர்கள் மற்றும் வழிகாட்டிகள் உங்களை ராஃப்டிங் மற்றும் மலையேற்றப் பயணத்தின் மூலம் அழைத்துச் செல்வார்கள். இந்தக் காவலர்களில் சிலர் காட்டு வேட்டைக்காரர்களாக இருந்தனர், அவர்கள் காட்டின் பாதுகாவலர்களாக மாறினர். ராஃப்டிங் பயணம் காடுகளால் சூழப்பட்ட மலைகளின் பரந்த காட்சியின் அனுபவம் நமக்கு புது அனுபவத்தை தரும். பயணம் 3 மணி நேரம் நீடிக்கும்.  நடந்து செல்லும் போது ஏரியின் எல்லைகளில் யானைகள் மற்றும் மான்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read Entire Article