மதுரையில் காவல் நிலையத்திற்குள் புகுந்த கொலை குற்றவாளி அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி காவலரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலர் பால்பாண்டி பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் முகமூடி அணிந்து, இரண்டு நபர்கள் காவல் நிலையத்திற்கு புகழ்ந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு காவலர் பால்பாண்டியையும் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேரையூர் டிஎஸ்பி சந்திரசேகர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குசென்று விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி அரவிந்தன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வி.குச்சம்பட்டி அருகில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த போராளி பிரபாகரன் என்ற பிரபாகரன் என்பதும் இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்புதான் வெளியில் வந்துள்ளார். இந்த நிலையில் பிரபாகரனை அவரது வீட்டிற்கு தேடிச்சென்ற போலீசார் அவர் இல்லாததால் அவரது விரட்டி விட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற பிரபாகரன் அவரது கூட்டாளி இருவரும் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

மேலும் காவல் நிலையத்தில் பொருட்களை அடித்து உடைத்து விட்டு காவல் நிலையத்திற்கு வெளியே பூட்டு போட்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக குற்றவாளி பிரபாகரன் அவரது கூட்டாளியை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது விசாரிப்பதற்காக திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் சத்திரப்பட்டி நோக்கி சென்ற போது தகவல் அறிந்த போலீசார் முத்துராமலிங்கபுரத்தில் தடுத்து நிறுத்தி சத்திரப்பட்டி செல்ல அனுமதி மறுத்தனர் இதனால் போலீசாருக்கும் முன்னாள் அமைச்சருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது,

இதனைத் தொடர்ந்து கர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவரது ஆதரவாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.." தமிழகத்தில் ஸ்காட்லாந்து போலீசாருக்கு நிகராக எடப்பாடி யார் ஆட்சியில் காவல்துறையினர் செயல்பட்டனர். தற்போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் காவலர்கள் கொலை செய்யப்பட்டனர். தற்போது காவல் நிலையத்திற்குள்ளே கொலை குற்றவாளிகள் புகுந்து தகராறு செய்யும் சம்பவம் அரங்கேறி உள்ளது. பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை என்றால் மக்களை யார் பாதுகாப்பது. அதிமுக ஆட்சியில் மக்கள் தாங்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.