காவல் நிலையமா? கலைக்கூடமா? அறிவுப் பெட்டகமாய் உருவெடுத்த தஞ்சை எஸ்பி அலுவலக வளாகம்

4 months ago 8
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் தற்போது ஒரு அறிவுப் பெட்டகமாக உருவெடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

காரணம். இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் மனதை அமைதிப்படுத்தும் விதமாகவும், சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ள "திருக்குறள் பலகைகள்" அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

தஞ்சை மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் தூய்மையான காற்றோட்டத்துடன் கூடிய அழகிய பூங்கா மற்றும் நடைபாதை (Walking Track) அமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் காவலர்களும், இங்கு வரும் பொதுமக்களும் உடல்நலனைப் பேண இந்த நடைபாதையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலை மேலும் பயனுள்ளதாக மாற்றும் நோக்கில், பூங்காவைச் சுற்றிலும் பசுமையான செடிகளுக்கு இடையே அறிவுச் சுடர்களாய் திருக்குறள் பலகைகள் நடப்பட்டுள்ளன. தற்போது பூங்கா மற்றும் அலுவலகத்தை சுற்றியும் மொத்தம் 15 இடங்களில் அழகிய நீல நிறப் பலகைகளில், வெள்ளை நிற எழுத்துக்களால் திருக்குறள் மற்றும் அதற்கான தெளிவுரைகள் எழுதப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, நிர்வாகத் திறனுக்கும், கடமை ஆற்றுவதற்கும் மிக முக்கிய இலக்கணமாகத் திகழும் "தெரிந்து வினையாடல்" அதிகாரத்தில் உள்ள,

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்" (குறள்: 517)

என்ற குறள் அங்கு வைக்கப்பட்டுள்ளது. "ஒரு காரியத்தை இந்த நபர், இந்தச் சாதனங்களால் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்ற அதன் விளக்கமும் அதில் இடம்பெற்றுள்ளது.

இது காவல்துறை அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் அன்றாடப் பணிகளைச் சிறப்பாகக் கையாள்வதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது.

உடல் ஆரோக்கியத்திற்காக நடைப்பயிற்சி செய்ய வரும்போது, கண்களுக்குக் குளிர்ச்சியான பசுமையோடு, அறிவுக்கு விருந்தாகத் திருக்குறளையும் அதன் பொருளையும் படித்துச் செல்வது பெரும் மனநிறைவைத் தருவதாக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். காவல்துறை அலுவலகத்திற்குப் பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு நல்ல முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

தஞ்சை மாவட்ட காவல்துறையின் இந்தத் தமிழ்வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு முயற்சி பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் வருபவர்கள் மன அழுத்தம் குறையும் வகையில் திருக்குறள் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது.

Read Entire Article