காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டம்

2 months ago 12
ARTICLE AD

தஞ்சாவூர்: காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 225 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்றது. பேராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாவரலசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் சுரேஷ்குமார், சதுணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் முருகையன், சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் ஆறுமுகம், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில பொதுச்செயலாளர் குமரவேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்,

போராட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் நிலையில் ரூ.19,500-ம் சமையர் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.15,700 அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பும் போது 10 ஆண்டு பணி முடித்த தகுதி உள்ள சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் 50 சதவீதம் இருக்க வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியருக்கு, அகவிலைப்படி, தேசிய மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும். அரசு ஊழியரக்ளுக்கு உள்ளது போல மகப்பேறு விடுப்பு 12 மாதம், மாத விடாய் கால விடுப்பு, தற்செயல் விடுப்பு 12 நாட்கள் மொத்தமாக அனுபவிக்கும் உரிமை, அங்கன்வாடிக்கு கோடை விடுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக அவர்கள் தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரெயில் நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் கைது செய்தனர். இதில் மொத்தம் 225 பேர் கைது செய்யப்பட்டனர்.

Read Entire Article