காய்கறி டெலிவரிக்கு சென்ற கேப்பில் பாலியல் வன்கொடுமை.. குழந்தை பெற்றெடுத்த 13 வயது சிறுமி!

2 months ago 10
ARTICLE AD

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட்டில் தான் இந்த கொடுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு குராயில் உள்ள பழங்குடி அரசு விடுதியில் 8 ஆம் வகுப்பு மாணவி தங்கி பயின்று வருகிறார். வீட்டில் இருந்து பள்ளி செல்ல சரியான வசதி இல்லாததால் மகள் விடுதியில் இருந்து படிப்பதை அவரது பெற்றோர் பாதுகாப்பாக உணர்ந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது.

தனக்கு வயிற்று வலி ஏற்படத் தொடங்கியதும் அச்சிறுமி விடுதி வார்டன் மற்றும் காவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் குடும்பத்தினரை அழைத்து விவரம் கூற சிறுமி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்த நிலையில் எதுவும் கேட்காததால் அவரின் பெற்றோர் போபாலில் உள்ள ஹமீதியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.  அச்சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவள் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்க, பெற்றோர்கள் தலையில் இடி இறங்கியது போல இருந்துள்ளது.

உடனடியான இந்த சம்பவம் தொடர்பாக பழங்குடியினர் விவகாரத் துறை உதவி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் உடனடியாக விடுதியின் கண்காணிப்பாளரான சங்கிலிபதி சயாமை பதவி நீக்கம் செய்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அல்தாஃப் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இந்த குற்றம் சாட்டப்பட்ட நபர், காய்கறிகளை டெலிவரி செய்ய விடுதிக்கு வருவது வழக்கமாக இருந்துள்ளது. அந்த சிறுமி 2 ஆண்டுகளாக அங்கு இருப்பதால் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2025ம் ஆண்டு மாணவியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த அல்தாஃப் அச்சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

பயந்துபோன மாணவி இதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் இருக்க, இதனை தனக்கு சாதகமாக்கி கொண்ட அல்தாஃப் வாய்ப்பு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான். மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லை என சென்றபோது தான் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குழந்தையை கருக்கலைப்பு செய்ய முடிவு செய்த அந்த சிறுமி  மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பது கண்டறியப்பட்டது. அதுவரை அந்த சிறுமிக்கும் தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் அச்சிறுமி இப்போது ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அச்சிறுமிக்கு உரிய கவுன்சிலிங் கொடுக்கும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article