காந்தாரா 1: கேரளா வெளியீட்டில் சிக்கல்! ப்ரித்விராஜின் அதிரடி முடிவு ரசிகர்களை ஏமாற்றுமா?
3 months ago 4
ARTICLE AD
‘காந்தாரா 2’ படத்தில், நடிகர்களின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்து, போஸ்டரை வெளியிட்டது. இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதன் மலையாள வெளியீட்டு உரிமையினை பிரித்விராஜ் கைப்பற்றி இருக்கிறார். இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘காந்தாரா 2’ படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
கன்னடத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்பட கன்னட திரையுலகத்தையே புரட்டி போட்டது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படம் புராண கதையை அடிப்படையாக வைத்து உருவானது. ரூ 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வரவேற்பைப் பெற்று பான் இந்திய வெற்றிபெற்றது. உலகளவில் இப்படம் ரூ 400 கோடி வசூலித்தது.  முதல்   பாகத்தைக் காட்டிலும் அதிபிரம்மாண்டமாக ரூ 125 கோடி பட்ஜெட்டில் ”காந்தாரா 2” திரைப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதிலும் இருந்து 20 வி.எஃப்.எக்ஸ் நிறுவனங்கள் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள். வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கேரளாவில் இதர மொழி படங்கள் வெளியிடும் போது, பங்குத் தொகை 50% மட்டுமே என்ற விதி இருக்கிறது. ஆனால், ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்திற்கு 55% பங்குத் தொகை வேண்டும் என்று ப்ரித்விராஜ் தயாரிப்பு நிறுவனம் கேட்டிருக்கிறது. இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. இதனால், இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகாது என்கிறார்கள்.இந்தப் பிரச்சினையில் ஹோம்பாளே நிறுவனம் தலையிட்டு பேசினால் சுமுக முடிவு எட்டும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால், ப்ரித்விராஜ் நிறுவனத்திடம் விநியோக உரிமை கொடுக்கப்பட்டுவிட்டதால், அந்நிறுவனம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது விரைவில் தெரியவரும்.
Read Entire Article