கோவை அருகே பெண் தர மறுத்ததால் வீடு புகுந்து காதலி மூதாட்டியை படுகொலை செய்த வாலிபர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் நெகமம் கொண்டே கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பூபதி என்பவர் இருசக்கர பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். மனைவி கலையரசி, மகள்கள் ஹரிதா, கவுசி, தாய் மயிலாத்தாள் ஆகியோருடன் பூபதி வசித்து வருகிறார். கவுசிக் ள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை சென்று வந்துள்ளார். ஹரிதா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நெகமம் கப்பளாங்கரையைச் சேர்ந்த அபிஷேக் என்பவருக்கும், கௌசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாள் அடைவில் காதலாக மாறியுள்ளது.

இவர்களின் காதல் விவகாரம் தந்தை பூபதிக்கு தெரியவந்ததையடுத்து, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இநிலையில், பெற்றோருடன் சேர்ந்து கவுசிக் வீட்டுக்கு சென்ற அபிஷேக் பெண் கேட்டுளளார். ஆனால் திருமண வயதை கவுசிக் எட்டவில்லை என கூறி திருமணம் செய்து கொடுக்க பெற்றொர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

காதலி வீட்டில் ரத்த வெள்ளம்

திருமண வயதை வந்ததும் கவுசி அபிஷேக் உடன் திருமணம் செய்து வைக்கலாம், என்று குடும்பத்தினர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், அபிஷேக் தொடர்ந்து காதலி வீட்டினரை வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு கவுசியின் வீட்டிற்கு சென்ற அபிஷேக் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு கவுசி மறுப்பு தெரிவித்தால் ஆத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கவுசசியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த பாட்டி மயிலாத்தாள், ஹரிதா ஆகியோரையும் அபிஷேக் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். அலற சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மயிலாத்தாள், கவுசி ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். ஹரிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் , அபிஷேக்கை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், நெகமம் காவல் நிலையத்தில் அபிஷேக் சரணடைந்துள்ளார். திருமணம் செய்து கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் 16 வயது சிறுமி கவுசி மற்றும் அவரது பாட்டி மயிலாத்தாள் ஆகியோரை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.