காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக்கொலை - மனைவி கண்முன்னே கேட்ட மரண ஓலம்!

1 year ago 7
ARTICLE AD
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் பாண்டி(26), சிவகாசியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பொன்னையா மகள் நந்தினி(22) என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படும் நிலையில், இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து, அய்யம்பட்டியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், சிவகாசி ஹவுசிங் போர்டு அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் தனது மனைவி நந்தினி அழைத்து வரச்சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கார்த்திக் பாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் பாண்டி சூப்பர் மார்க்கெட் வாசலிலேயே தனது மனைவி கண்முன்னே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தனது சகோதரி நந்தினி காதல் திருமணம் செய்த ஆத்திரத்தால் சகோதரர்கள் பாலமுருகன்(27), தனபாலமுருகன்(25) மற்றும் தனது நண்பர் சிவா(23) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கார்த்திக் பாண்டியை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Entire Article