காதல் ஜோடியை சேர்த்த ஆளுநர்.. மனைவி மீது கடுப்பாகிய விஷால் - அயலி பாரிஜாதம் சீரியலில் இன்று

2 months ago 8
ARTICLE AD

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் மற்றும் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் அயலி ஆகிய சீரியல்கள் மகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.

மண்டபத்திற்கு வந்த ஆட்டோ டிரைவர்:

இன்றைய எபிசோடில் கல்யாண பெண் ஆட்டோ டிரைவர் ஒருவரை காதலிப்பதாக சொல்லிய நிலையில், இசை அவருடன் சேர்த்து வைப்பதாக வாக்கு கொடுக்க இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது அயலி மற்றும் இசை என இருவரும் சேர்ந்து அந்த ஆட்டோ டிரைவரை கண்டுபிடித்து மண்டபத்திற்கு அழைத்து வருகின்றனர்.

சேர்த்து வைக்கச் சொன்ன ஆளுநர்:

இதனால் மண்டபத்தில் பெரிய பிரச்சனை உருவாக கவர்னர் அங்கு வந்ததும் நடந்த விஷயத்தை சொல்ல அவர் புடிச்சவங்களோடு சேர்த்து வைப்பது தான் சரி என்று சொல்ல அயலி, இசை சந்தோஷம் அடைகின்றனர். இதனால் ரித்திகா மாப்பிள்ளை வீட்டு சொந்தமான ஒருவரை ஏற்றி விட அவர் இதுகுறித்து சத்தம் போடுகிறார்.

சிவா மாப்பிள்ளையே மாறிப்போச்சு ஏதாவது பிரச்சனை பண்ணா சந்தேகம் தூக்கி உள்ள வச்சிடுவாங்க என்று சொல்ல அந்த நபர் பயந்து போய் நான் சாப்பிட்டுவிட்டு கிளம்பிடுறேன் என ஜகா வாங்குகிறான்.

இசை மீது விஷாலுக்கு கோபம்:

இதையடுத்து ஸ்ரீஜா இசையை பழி வாங்குவதற்காக, விஷாலின் பின்பக்கம் நான்தான் அவரது மனைவி என எழுதி ஒட்ட இசை தான் இப்படி செய்ததாக நினைத்து அவளை அறைகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் மற்றும் அயலி மகா சங்கமத்தை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article