மதுரை மல்லி கிலோ ரூ.2000 விற்பனையாகிறது, மற்ற பூக்களின் விலை நிலவரம் தெரிந்துகொள்ல முழுமையாக வாசிக்கவும்.

சிவராத்தி நிகழ்வு

இந்து மதத்தில் பூஜை வழிபாடு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எந்த பண்டிகை, எத்தகைய விசேஷ நாட்கள் என்றாலும் விரதமிருந்து, வழிபாடு செய்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இப்படியான நிலையில் மாசி மாதம் நேற்று பிப்ரவரி 13ம் தேதி பிறந்தது. இந்த மாதம் வந்து விட்டாலே நம் அனைவருக்கும் மகா சிவராத்திரி தான் நினைவுக்கு வரும். இத்தகைய நாள் சிவபெருமானுக்குரிய நாளாகும். மகா சிவராத்திரி நாளில் மக்கள் இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருந்து வழிபடுகிறார்கள். பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இருந்த நான் தான் பெரியவன் என்ற அகந்தையை அழிக்க சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றிய நாளாக மகா சிவராத்திரி பார்க்கப்படுகிறது. இன்றைய நாளில் வீட்டிலும், அருகிலுள்ள சிவலாயங்களிலும் நாம் விரதமிருந்து வழிபடலாம். அப்படி செய்வதால் சிவபெருமான் அருள் பெற்று வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி, செல்வ செழிப்பு ஆகியவை அமையும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் நிகழ்வை முன்னிட்டு பூக்கள் விலையும் அதிகரித்துள்ளது.

மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:

மதுரை மல்லி கிலோ ரூ.2000, பிச்சி ரூ.1500, முல்லை ரூ.1800, செவ்வந்தி ரூ.250, சம்பங்கி ரூ.400, செண்டு மல்லி ரூ.100, கனகாம்பரம் ரூ.1000 , ரோஸ் ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.250, பன்னீர் ரோஸ் ரூ.350, கோழிக்கொண்டை ரூ.150, அரளி ரூ.400, மரிக்கொழுந்து ரூ.100, தாமரை (ஒன்றுக்கு) ரூ.50 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்கள் விற்பனை சுமாராக உள்ளது. 1 டன் வரத்து உள்ளது. சிவராத்திரி என்பதால் விலை சற்று அதிகமாக உள்ளது. நாளையும் நாளை மறுநாளும் இதே விலை நிலவரம் நீடிக்கும். மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்துள்ளார்.