காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?

4 days ago 3
ARTICLE AD

காணாமல் போன மூதாட்டி

தெலுங்கானாவில் மிக பிரபலமான பகுதியாக கருதுபடுவது ஜூபிலி ஹில்ஸ். செல்வந்தர்கள் மற்றும் திரைபிரபலங்கள் அதிகம் வாழும் இந்த பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தெலுங்கானாவையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பகுதியில் தனியாக வாழ்ந்து வந்த மங்கம்மா என்ற மூதாட்டி கடந்த மாதம் (மார்ச் 14) ஆம் தேதி கடைக்கு சென்ற போது காணாமல் போன நிலையில் இது குறித்து அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகாரளித்தார்.

சிசிடிவி காட்சியில் சிக்கிய கார்

வழக்கு பதிவு செய்த பிலிம் நகர் காவல் துறையின் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் (மார்ச் 19) ஆம் தேதி யதம்மா என்ற மூதாட்டி காணாமல் போன நிலையில் இது குறித்தும் வழக்குப் பதிவு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போது இரு மூதாட்டியையும் கடைசியாக ஒரே பதிவெண் கொண்ட கார் அழைத்து சென்றது தெரிய வந்தது. எனவே போலீசார் அந்த காரின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளரான மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

வெளியான திடுக்கிடும் தகவல்

மருத்துவர் அளித்த தகவலின் படி அவரது கார் ஓட்டுநர் வாசு என்பவரை கைது செய்து விசாரித்ததால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வந்த வாசு சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்த நிலையில் மருத்துவரிடம் ஓட்டுநராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

இருப்பினும் அவரது பண தேவை பூர்த்தி அடையாத நிலையில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறி வைத்து அவர்களை கொலை செய்து நகைகளை திருடும் ஒரு கொடூர திட்டத்தை திட்டியுள்ளார்.

கழுத்து நெறித்து கொலை

கடந்த மாதம் தனியாக வெளியில் சென்ற யதம்மா மற்றும் மங்கம்மாவை உதவி செய்வதாக ஏமாற்றி காரில் அழைத்து சென்று அவர்களை கழுத்தை இருக்க கொலை செய்து அவர்களின் நகைகளை கைப்பற்றி இருக்கிறார். தொடர்ந்து அவர்களது உடலை புறநகரில் உள்ள புதர்களில் வீசி விட்டு சென்றது தெரிய வந்தது. எனவே வசுவின் தகவல் படி மூதாட்டிகள் உடல்களை கைப்பற்றி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read Entire Article