காஞ்சிபுரம் அங்காளம்மன் மயான கொள்ளை: 64 கைகளுடன் காட்சி தந்த அம்மன்! பக்தர்களின் பரவசம்!

1 month ago 7
ARTICLE AD

காஞ்சிபுரத்தில் மயான கொள்ளை முன்னிட்டு, வழியெங்கும் பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றி மயான கொள்ளை திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காளி வேடம் அணிந்தும், உடல் முழுவதும் எலுமிச்சை பழம் குர்த்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காஞ்சிபுரம் மயான கொள்ளை

பெரிய காஞ்சிபுரம் கம்மாள தெரு மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டும் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

அங்காளபரமேஸ்வரி அம்மன் மகிஷாசுரவர்த்தினி கோலத்தில் 64 கைகளை கொண்டு எலுமிச்சை பழம் மாலை, நறுமண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, ராட்சத மாலைகளுடன் பிரமாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அங்காள பரமேஸ்வரி அம்மன் உற்சவர் கோவிலில் இருந்து புறப்பட்டு பூக்கடை சத்திரம் வழியாக நான்கு ராஜவீதி வழியாக வலம் வந்து, பழைய ரெயில்வே சாலையில் உள்ள இடுகாட்டில் நிறைவு பெற்றது.

வினோத திருவிழா

அங்காளம்மன் மயானத்தை நோக்கி சென்றபோது ஏராளமான பக்தர்கள் கோழிகளை கடித்தவாறு அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது காய்கள், பழ வகைகள், மலர்கள், நாணயம், ரூபாய் நோட்டுகள் போன்றவற்றை அம்மன் மீது வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் எலுமிச்சை குத்தியும், 30 அடி நீள வேலை அலகு குத்தி பேண்டு வாத்தியங்கள் முழங்க தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தெய்வங்களின் உருவங்களை போன்று வேடமணிந்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மயான கொள்ளை திருவிழா ஏன் நடைபெறுகிறது ?

அங்காள பரமேஸ்வரி அவதாரம் எடுத்த பார்வதி தேவி, மேல்மலையனூர் மயானத்திற்குச் சென்றார். அங்கு சுவையான உணவைச் சமைத்து மூன்று கவளங்களாக உருட்டினார். முதல் இரண்டு கவளங்களை கபாலத்திற்குப் போட்டார். அதன் சுவையில் மயங்கிய கபாலம், மூன்றாவது கவளத்தை அம்மன் தரையில் வீசியபோது, அதை உண்ண சிவனின் கையை விட்டு கீழே இறங்கியது. அந்த நொடி, அம்மன் தனது விஸ்வரூபத்தை எடுத்து கபாலத்தைத் தனது காலால் மிதித்து அழித்தார். சிவபெருமான் சாப விமோசனம் பெற்ற இந்த நிகழ்வே 'மயான கொள்ளை' என்று கொண்டாடப்படுகிறது.

Read Entire Article