காஞ்சிபுரத்தை அசத்தும் இலவச மெட்ரிகுலேஷன் பள்ளி.. கிராமபுற மாணவர்களுக்கு ஜாக்பாட்..!

6 months ago 5
ARTICLE AD

காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தில் கிராமப்புற மாணவர்கள் இலவச கல்வி கற்கும் வகையில் அக்க்ஷயா அறக்கட்டளை சார்பில் பள்ளி மற்றும் முதியோர் இல்லம் ஆகியவற்றை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் மற்றும் எம்எல்ஏ கள் சுந்தர் எழிலரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மெட்ரிகுலேஷன் தரத்தில் தொடக்கப்பள்ளி

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு நான்கு இடங்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்களை செயல்படுத்தி வரும் அக்க்ஷயா டிரஸ்ட் காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தில் சுற்றுப்புற கிராம மாணவர்கள் இலவச ஆங்கில வழி கல்வி கற்கும் வகையில் தொடக்கப்பள்ளி மற்றும் முதியோர் இல்லத்தினை 14 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ளனர்.

இதற்கான திறப்பு விழா இன்று அக்ஷயா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அக்ஷயா அறக்கட்டளை நிறுவனர் கோபாலன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் மற்றும் எம் எல் ஏக்கள் சுந்தர் எழிலரசன் ஆகியோர் திறந்து வைத்து வளாகத்தினை பார்வையிட்டு சிறப்புரையாற்றினர்.

சென்னைக்கு நிகரான வளர்ச்சி

பள்ளியைச் சுற்றி உள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் இலவச ஆங்கில வழி கற்கும் வகையில் கட்டணமில்லா கல்வியை தொடர்ந்து வழங்க உள்ளதாக டிரஸ்ட் நிறுவனர் கோபாலன் தெரிவித்தார். மேலும் சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில், பயன்படுத்தப்படும் கல்வி உபகரணங்கள் மாணவர்களின் பாதுகாப்புக்கு சி.சி.டி.வி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் 240 மாணவர்கள் இலவச ஆங்கில வழி கல்வி கற்கும் வகையில், இப்பள்ளி தொடர்ந்து செயல்படும் எனவும் இதே போல் மூத்த குடிமக்கள் தங்கும் விடுதியில், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனவும் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பூச்சி முருகன்

இந்நிகழ்ச்சியில் பேசிய பூச்சி முருகன் தெரிவித்ததாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 400 கோடி சொத்துக்கள் இருந்தும் அதில் உள்ள முன்னணி நட்சத்திர நடிகர்கள் கூட கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கில வழி கல்வி கற்க சேவை செய்ய முன்வரவில்லை. ஆனால் அக்ஷயா தொண்டு நிறுவனம் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச ஆங்கில வழிக் கல்வியை ஏற்படுத்தி தந்த நிறுவனங்கள்தான் உச்ச நட்சத்திர கொண்டவர்கள் நீங்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் டிரஸ்ட் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியைகள் என பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article