காஞ்சி சங்கரமடத்தில் இளையமடாதிபதி நாளை பொறுப்பேற்பு.. நாளை என்னென்ன நடக்கும் தெரியுமா ?

7 months ago 5
ARTICLE AD

காஞ்சிபுரம் மாநகரம் ஆன்மீக பூமியாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகரத்தில் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. அதேபோன்று காஞ்சிபுரம் மாநகரத்தில் பல்வேறு, மடங்களும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் சங்கர மடம் (Kanchipuram Sankara Mutt ), உலக அளவில் பிரசித்தி பெற்ற மடமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில், பீடாதிபதி சங்கராச்சாரியார் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர்.

சங்கர மடத்தின் வரலாறு என்ன ?

காஞ்சிபுரம் சங்கர மடம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அலுவல்முறை வரலாற்றின் படி, காஞ்சிபுரம் சங்கரமடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. காஞ்சிபுரம் சங்கரமடம் என்பது இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற மடம் என்பதால், இது நடக்கும் ஒவ்வொரு நகர்வுகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக (சங்கராச்சாரியா) ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் ( sri Vijendra Saraswathi swamigal ) செயல்பட்டு வருகிறார். இவர் தனது 14 வயதில் 69 ஆவது ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளால், எழுபதாவது இளைய மடாதிபதியாக பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையமடாதிபதி நியமனம்

தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கரமடத்தில் 71 வது இளையமடாதிபதி நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக கணேச சர்மா திராவிட்டு என்பவர் நியமிக்கப்பட உள்ளதாக சங்கரமடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் ஏப். 30-ம் தேதி சந்நியாஸ்ரம தீட்சை பெற உள்ளதாகவும் சங்கர மடம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாளை என்னென்ன நடக்கும் ?

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இளையமடாதிபதி நியமனம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று ஸ்ரீ விஜயேந்திர சர்ஸவதி சுவாமிகள் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டு, அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். சந்நியாஸ்ரம் தீட்சை வழங்கும் நிகழ்ச்சி மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்த குளத்தில் நடைபெறுகிறது.

இதனையடுத்து, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சந்நிதியில் தரிசனம் முடித்து கோயில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதிக்கு வந்ததும் தீட்சை நாமம் சூட்டுதல் நிகழ்வு நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக கோயிலில் இருந்து கொல்லா சத்திரம், ராஜ வீதி வழியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், இளைய மடாதிபதியும் ஊர்வலமாக சங்கர மடத்துக்கு காஞ்சி நகர வரவேற்புக் குழுவின் சார்பில் அழைத்து வரப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் சங்கர மடம் வந்து சேர்ந்ததும் இளைய மடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71-வது பீடாதிபதியாக பொறுப்பேற்கிறார். இந்த விழாவுக்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article