சென்னை: காக்னிசண்டில் ஃபிரெஷர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு... 2025, 2026 பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கலாம்! பணி அனுபவம் தேவையில்லை... ஜூலை 15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்ட் (Cognizant), 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்த ஃபிரெஷர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Digital Workplace Practice (Service Desk) பிரிவுக்கான இந்த ஆட்சேர்ப்பில், முன் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 15-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

எந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்?

இந்த வேலைவாய்ப்புக்கு 2025 அல்லது 2026-ஆம் ஆண்டில் ஏதேனும் மூன்று ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தகுதியான படிப்புகள்:

B.Com
BCA
B.Sc
BA
BBA
B.Voc
BMS
மற்றும் பிற மூன்று ஆண்டு பட்டப்படிப்புகள்

விண்ணப்பதாரர்களுக்கு அரியர்ஸ் (Backlogs) இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் Revaluation செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால், முந்தைய தேர்வு முடிவுகள் தொடர்பான ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதியில் முக்கிய நிபந்தனை

10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ (பொருந்தினால்) மற்றும் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கல்விச் சான்றிதழ்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்றும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஆங்கிலத் திறன் அவசியம்

இந்தப் பணியில் தேர்வாகும் நபர்கள் வாடிக்கையாளர்களுடன் நேரடியாகப் பேச வேண்டியிருப்பதால், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், புதிய தொழில்நுட்பங்களை விரைவாகக் கற்றுக்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கும் திறனும் இருக்க வேண்டும்.

நைட் ஷிப்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்

இந்த வேலை Service Desk பிரிவைச் சேர்ந்தது என்பதால், Night Shift முறையிலும் பணியாற்ற வேண்டியிருக்கும். அதற்குத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பணியிடம்

இது PAN India Recruitment என்பதால், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பணியமர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சென்னை, கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட காக்னிசண்ட் அலுவலகங்களில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கலாம்.

PAN மற்றும் ஆதார் கட்டாயம்

விண்ணப்பதாரர்களிடம் PAN Card மற்றும் Aadhaar Card கட்டாயமாக இருக்க வேண்டும். இரண்டு ஆவணங்களிலும் பெயர், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். வேறுபாடுகள் இருந்தால், விண்ணப்பிக்கும் முன்பே அவற்றை சரிசெய்ய வேண்டும்.

ஏனெனில், இறுதித் தேர்வுக்கு முன் நிறுவனத்தால் Background Verification மேற்கொள்ளப்படும்.

இன்டர்வியூ செல்லும்போது கவனிக்க வேண்டியவை

நேர்முகத் தேர்வில் பங்கேற்கும்போது,

இரண்டு பக்க Resume
High Resolution புகைப்படம்
கல்விச் சான்றிதழ்கள்
அடையாள ஆவணங்கள்
ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பில் சம்பள விவரங்கள் வெளியிடப்படவில்லை. இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பள விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கிடைக்கும் கூடுதல் சலுகைகள்

இந்த வேலைக்கு தேர்வாகும் நபர்களுக்கு,

Service Bond இல்லை
Night Shift Allowance
உயர்கல்விக்கான Sponsorship
Timely Rewards & Recognition
தொழில்முன்னேற்ற வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள், ஜூலை 15-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஐடி துறையில் பணியை தொடங்க விரும்பும் ஃபிரெஷர்களுக்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது