கவலைக்கிடம்! ஐ.சி.யு. வார்டில் சீதாராம் யெச்சூரி - சோகத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள்

1 year ago 7
ARTICLE AD
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், நாட்டின் மூத்த அரசியல்வாதியாகவும் திகழ்பவர் சீதாராம் யெச்சூரி. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சீதாராம் யெச்சூரி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p> <p>மூன்று நாட்களுக்கு முன்பே சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது. இதனால், அவர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p> <p>கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி மருத்துவமனையில் நெஞ்சு வலி மற்றும்&nbsp; நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்ட சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவது மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மற்றும் மற்ற அரசியல்&nbsp; கட்சித் தலைவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>&nbsp;</p>
Read Entire Article