திருக்குறள் பரப்புநர், பஞ்சர்கடை கல்லல் முத்தையா அவர்கள் மாணவர்களிடம் திருக்குறள் சார்ந்த வினாக்களை எழுப்பி வினாவிற்கு விடையளித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கினார்.

கல்லலில் திருக்குறள் நூல் வழங்கும் விழா.

கல்லல் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் திருக்குறள் நூல் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளித்தலைமை ஆசிரியர் ஜெயசீலன் தலைமை வகித்தார், உதவித் தலைமை ஆசிரியர் தனுஷ் ஸ்டாலின் வரவேற்றார், கல்லலைச்சேரந்த திருக்குறள் பரப்புநர், பஞ்சர்கடை முத்தையா நோக்க உரையாற்றினார். சிவகங்கை தமிழவைய ஒருங்கிணைப்பாளர் புலவர் கா. காளிராசா, வாழ்த்துரைத்தார், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் தெ. சிவப்பிரகாஷ் கலந்து கொண்டு திருக்குறளை வாழ்வியலாகக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களிடம் வலியுறுத்தினார். மற்றொரு சிறப்பு விருந்தினராக தேசிய நல்லாசிரியர் திருக்குறள் தேனீ செ. கண்ணப்பன் கலந்துகொண்டு திருக்குறளை எளிமையாக மனனம் செய்வது எப்படி என்று ஆலோசனைகள் வழங்கியதோடு, மாணவர்கள் அதிகார எண் சொன்னால் அதிகாரத்தையும் குறள் எண் சொன்னால் திருக்குறளையும் சொல்லி மாணவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

திருக்குறள் நூல் வழங்கப்பெற்றது நிகழ்வு

திருக்குறள் பரப்புநர், பஞ்சர்கடை கல்லல் முத்தையா அவர்கள் மாணவர்களிடம் திருக்குறள் சார்ந்த வினாக்களை எழுப்பி வினாவிற்கு விடையளித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கினார். இந்நிகழ்வில் காரைக்குடி திருக்குறள் பரப்புநர் தியாகராஜன், கல்லல் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர் 550 மாணவர்களுக்கு திருக்குறள் நூல் வழங்கப்பெற்றது நிகழ்வின் இறுதியில் தமிழாசிரியர் செபஸ்தியம்மாள் நன்றி உரைத்தார்.