கலைஞர் vs இந்திரா காந்தி: திண்டிவனம் பேருந்து நிலையப் பெயரால் வெடித்த அரசியல் யுத்தம்!

2 months ago 9
ARTICLE AD

விழுப்புரம் : திண்டிவனத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு சூட்டப்பட்டிருந்த கலைஞர் பெயரை அகற்றிவிட்டு, மீண்டும் இந்திரா காந்தி பெயரைச் சூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நகரமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்.

கலைஞர் பெயர் நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு சூட்டப்பட்டிருந்த கலைஞர் பெயரை அகற்றிவிட்டு, மீண்டும் இந்திரா காந்தி பெயரைச் சூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நகரமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

55 ஆண்டு கால வரலாறு

திண்டிவனம் நகரின் மையப்பகுதியில் கடந்த 55 ஆண்டுகளாக இந்திரா காந்தி பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. நாளடைவில் இடநெருக்கடி மற்றும் கட்டிடப் பழுது காரணமாக அந்தப் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அமையும் வரை மேம்பாலத்தின் அடியில் தற்காலிகமாகப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்ததால், பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக கடும் சிரமத்தைச் சந்தித்து வந்தனர்.

27 கோடியில் புதிய பேருந்து நிலையம்

மக்களின் சிரமத்தைப் போக்க, திண்டிவனம் தீர்த்தங்குளம் ஏரிப் பகுதியில் சுமார் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்' என்று பெயர் சூட்டப்பட்டு, முகப்பு வாயில்களில் பெயர்ப் பலகைகளும் பொறிக்கப்பட்டன.

பெயர் மாற்ற சர்ச்சையும் எதிர்ப்பும்

கலைஞர் பெயர் சூட்டப்பட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழைய பேருந்து நிலையத்தின் பெயரான 'இந்திரா காந்தி' பெயரையே புதிய பேருந்து நிலையத்திற்கும் சூட்ட வேண்டும் எனப் பலரிடமிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில், வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக இந்தப் பேருந்து நிலையத்தைத் திறந்து வைக்க இருந்தார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த சூழலில், திடீரென பேருந்து நிலைய முகப்பில் இருந்த "முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்" என்ற பெயர் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக "இந்திரா காந்தி பேருந்து நிலையம்" என்ற பெயர் பொறிக்கப்பட்டது. முன்னர் இருந்த இந்திரகாந்தி பேருந்து நிலையம், இந்திரகாந்தி அம்மையார் நேரில் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது

திமுகவினர் தர்ணா

பெயர் மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த திமுக நகரமன்ற உறுப்பினர்கள் 10-க்கும் மேற்பட்டோர், பேருந்து நிலையத்தின் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்ட அவர்கள், "யார் உத்தரவின் பேரில் பெயர் மாற்றப்பட்டது?" எனக் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷ் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பெயர் மாற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தால் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. திறப்பு விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தப் பெயர் விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Read Entire Article