கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்

4 days ago 2
ARTICLE AD

தஞ்சாவூர்:  பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை ஒருமையில் பேசி, கீழே தள்ளிவிட்ட போலீசாரால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் போர்க்களம் போல் மாறியது. மேலும் பச்சைத்துண்டு அணிந்தவர்களை உள்ளே செல்ல தடை விதித்ததும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மனு அளிப்பதற்காகப் பொதுமக்களுடன் சேர்ந்து ஏராளமான விவசாயிகளும் வந்திருந்தனர்.

ஒருமையில் பேசிய போலீசாரால் தர்ணா!

அப்போது "தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட முனையும் கர்நாடக அரசின் முயற்சியைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், மத்திய அரசும் இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத் தலைவர் பழனியப்பன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் நோக்கிப் பேரணியாக வந்தனர்.

அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, அவர்களைப் போராட விடாமல் தடுத்த போலீசார், வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்ய முயன்றனர். அப்போது, விவசாய சங்கத் தலைவர் பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், "எங்களை மனு அளிக்க அனுமதியுங்கள்" எனக் கோரியபோது, வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார், விவசாயிகளைப் பலவந்தமாகக் கீழே தள்ளி, வேனுக்கு இழுத்துச் செல்ல முயன்றனர்.

மேலும், போலீஸ் தரப்பில் விவசாயிகளை ஒருமையில் பேசியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், போலீசாரைக் கண்டித்து கலெக்டர் அலுவலகத் தரையிலேயே அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் குதித்தனர்.

விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டபோது, "விவசாயிகளுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? விவசாயிகளைத் தாக்கிய போலீசார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோஷங்களை எழுப்பினர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வல்லம் டி.எஸ்.பி காயத்ரி, தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம் கடுமையான தொனியில் ஒருமையில் பேசியுள்ளார். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுப் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, வேறு வழியின்றி போலீஸ் தரப்பு பணிந்தது. இறுதியாக, விவசாயிகளில் ஐந்து பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க போலீசார் அனுமதித்தனர். அதன்படி, மாவட்ட கலெக்டர் ரேவதியைச் சந்தித்த விவசாயிகள், தங்கள் கோரிக்கை மனுவை அளித்ததோடு, தங்களை ஒருமையில் பேசிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்தனர். இந்த மோதலால் கலெக்டர் அலுவலக வளாகம் போர்களம் போல் காட்சியளித்தது.

விவசாயிகளின் அடையாளமான ‘பச்சைத் துண்டு’ அணிந்து வந்தவர்களை வளாகத்திற்குள் அனுமதிக்காமல் நுழைவாயிலிலேயே மறித்து நிறுத்தினர். "பச்சைத் துண்டை அணிந்து உள்ளே செல்ல அனுமதி இல்லை" என போலீசார் கறாராகக் கூறவே, அதிர்ச்சியடைந்த விவசாயிகள், "தமிழகத்தில் விவசாயிகளின் அடையாளமான பச்சைத் துண்டு அணியக் கூட அனுமதி இல்லையா?" என போலீசாருடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் சிலரும் பச்சைத்துண்டுடன் வந்தனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  புதிய கலெக்டராக ரேவதி இன்று பொறுப்பேற்ற நிலையில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து உடன் நடவடிக்கை எடுப்பாரா?  என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள். என்ன செய்யப்போகிறார் கலெக்டர் ரேவதி?

Read Entire Article