கரூர் ஆத்தூர் ஸ்ரீ மகா சோளியம்மன், ஸ்ரீ மகா முத்து சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால்குடம், தீர்த்த குடம் எடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தப்பாட்டம், குதிரை ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் ஆடிய படி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து மண்மங்கலம் ஆத்தூர் சோலியம்மன் ஆலயம் வரை ஊர்வலம். இந்தியாவில் உள்ள பல்வேறு புனித நதிகள் (140) இடங்களில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் வீரசோளிபாளையத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ மகா சோளிஅம்மன், அருள்மிகு ஸ்ரீ மகா முத்துசுவாமி ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா, வருகின்ற மாசி மாதம் 26 ஆம் தேதி 10.03.2025 திங்கட்கிழமை காலை 5:30 மணிக்கு மேல் 6:45 மணிக்குள் நடைபெறுவதை ஒட்டி இன்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள், தாரதப்பட்டை உடன் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வண்ண உடைய அணிந்து தீர்த்தம் குடம், பால்குடம் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு புனித நதிகள் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது .

இந்நிலையில் அந்த தீர்த்தத்துடன் கன்னிப் பெண்களும் முன் செல்ல அதைத் தொடர்ந்து பெண்கள் பக்தர்களும், ஆண்கள் பக்தர்கள் என அனைவரும் ஊர்வலமாக கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஆத்தூர் சோளியம்மன் ஆலயத்திற்கு சென்றடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகளவில் பக்தர்கள் வருகையை ஒட்டி கரூர் ஜவகர் பஜார் ,கோவை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து தற்போது தீர்த்தம் ஆலயம் சென்ற பிறகு இன்று மாலை முளைப்பாரி அழைப்பு உடன் முதல் காளை வேள்வி தொடங்க உள்ளது. ஆத்தூர் மகா சோளியம்மன் ஆலயத்தில் நடைபெற உள்ள அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவிற்கு மின்சார துறை அமைச்சர் வி .செந்தில் பாலாஜி உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கு ஆலய நிர்வாகிகள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.