கரூர் கொடுமை; வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது; யாரெல்லாம் தெரியுமா? பரபரப்பு தகவல்!

2 months ago 4
ARTICLE AD

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பிய வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் பரப்புரையில் தவெக தலைவர் விஜயைப் பார்க்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சென்றனர். இன்று கரூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார்.

பொதுமக்கள் அமைதிக்கு பங்கம்

இதற்கிடையே காவல்துறை வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து காவல் துறை கூறும்போது, கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.

இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்துள்ளது.

3 பேர் கைது

இதுவரை 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பாஜக சகாயம், த.வெ.க. நிர்வாகிகள் சிவநேசன், சரத்குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சகாயம் (38 வயது) சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர். ஆவடியைச் சேர்ந்தவர் சரத் குமார் (32 வயது) ஆவார். 32 வயதான சிவநேசன், மாங்காடு பகுதியில் வசிப்பவர் ஆவார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது.

Read Entire Article