பட்ஜெட் விலையில் புதிய கார் வாங்க நினைப்போருக்கு மாருதி ஆல்டோ K10 ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. செப்டம்பர் 2026-ல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

முதல் முறை கார் வாங்குவோரை ஈர்க்கும் இதன் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ₹3.70 லட்சம் ஆகும். RTO, இன்சூரன்ஸ், வரிகள் மற்றும் நகரங்களை பொறுத்து ஆன்-ரோடு விலை சற்று மாறுபடும்.

தள்ளுபடி விவரங்கள்

செப்டம்பர் மாத ஆஃபரில், ஆல்டோ K10 காரை வாங்குவோர் அதிகபட்சமாக ₹62,500 வரை சேமிக்கலாம். பெட்ரோல்- மேனுவல் (MT) LXI வேரியண்டிற்கு மட்டுமே இந்த முழு சலுகை கிடைக்கும். இதில் ₹35,000 கன்ஸ்யூமர் ஆஃபர் (₹10,000 ஸ்பாட் ஆஃபர் + ₹25,000 RIPS ஆஃபர்) மற்றும் ₹10,000 PCM போனஸ் அடங்கும்.

பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ₹15,000 போனஸ் அல்லது காரை ஸ்கிராப் செய்தால் ₹10,000 ஸ்கிராப்பேஜ் போனஸ் பெறலாம் (இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்காது). மேலும், தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு ₹2,500 இன்ஸ்டிடியூஷனல் ஆஃபர் மற்றும் ₹2,100 ரூரல் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

STD மற்றும் CNG வேரியண்ட்களுக்கு ₹37,500 வரையிலும், மீதமுள்ள பெட்ரோல் மாடல்களுக்கு ₹42,500 வரையிலும் சலுகைகள் கிடைக்கின்றன.

இன்ஜின் மற்றும் மைலேஜ்

இதில் 1.0 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது மேனுவல் மற்றும் AGS ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. நெரிசலான நகரங்களுக்கு ஆட்டோமேட்டிக் மாடலும், குறைந்த விலையில் வாங்க மேனுவல் மாடலும் சிறந்தவை.

பெட்ரோல் மேனுவல் கார் 24.39 kmpl, ஆட்டோமேட்டிக் கார் 24.9 kmpl மற்றும் சிஎன்ஜி மாடல் 33.85 km/kg என்ற சிறப்பான மைலேஜை தருகின்றன. ஓட்டும் விதம், டிராபிக் மற்றும் வானிலைக்கு ஏற்ப மைலேஜ் மாறுபடும்.

வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்

பழைய மாடலை விட இது நவீன வடிவமைப்பை கொண்டுள்ளது. புதிய கிரில் மற்றும் கூர்மையான ஹெட்லைட்டுகளுடன் முன்புறம் ஈர்க்கும் வகையில் உள்ளது. இதன் சிறிய வடிவமைப்பு குறுகிய சாலைகளில் ஓட்ட வசதியாக இருக்கும். உட்புறத்தில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் கொண்ட டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர் விண்டோஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட டேஷ்போர்டு போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறைந்த பட்ஜெட் காராக இருந்தாலும் அன்றாட பயன்பாட்டிற்கான அனைத்து வசதிகளும் இதில் உள்ளன.