கம்பம் அருகே இரண்டு சக்கர வாகங்களை திருடி வந்த 5 பேர் கைது

1 year ago 9
ARTICLE AD

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதி மற்றும் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இரண்டு சக்கர வாகன திருட்டு அதிகரித்து வந்தன. இதுகுறித்த புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவிட்டார். அதன்படி உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலன் மேற்பார்வையில் ஆய்வாளர் பார்த்திபன், சார்பு ஆய்வாளர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் குற்றபிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறதா? இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கம்பம் நகரில் போலீசார் ரோந்து பணிமேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை மகனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு 2 பேரையும்  அழைத்துச் சென்று  கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

போட்டா போட்டி போடும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்! மக்கள் சாய்ஸில் முதலிடம் பிடித்த போன் எது தெரியுமா?

இதில் உத்தமபாளையம் அருகேயுள்ள கோவிந்தன்பட்டியைச் சேர்ந்த சேகர் (வயது 44) மற்றும் அவரது மகன் விக்னேஷ் (20) என்பதும் கூடலூர் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன்(43), சின்னமனூர் அருகேயுள்ள பூசாரிகவுண்டன் பட்டியைச் சேர்ந்த மகேந்திரன்(44), கூடலூரைச் சேர்ந்த ஆனந்தகுமார் (49) ஆகியோருடன் சேர்ந்து இரண்டு சக்கர வாகனங்களை திருடி வாகனத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு என்ஜின் மோட்டார் உதிரி பாகங்களை கேரளா மற்றும் மதுரை பழைய இரும்பு கடைகளில் விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்தது.

Breaking News LIVE, Aug 13: உச்சத்தில் கேரட் விலை; சரிவில் புதினா விலை: அனைத்து காய்கறிகள் விலை நிலவரம்..!

மேலும் திருடப்பட்ட 13  இரண்டு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் சேகர் அவரது மகன் விக்னேஷ், ஈஸ்வரன், மகேந்திரன், ஆனந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article