100 கோடி வசூல் தொட்ட லோகா

மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வெளியாகியுள்ள லோகா திரைப்படம் அமோக வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் தமிழ் மற்றும் இந்தி மொழியிலும் படம் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் 7 நாட்களில் ரூ 100 கோடி வசூலை இப்படம் சேர்த்துள்ளது. மலையாளத்தின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள லோகா ஒட்டுமொத்த தென் இந்திய சினிமாவில் சாதனை படைத்துள்ளது . அந்த வகையில் தென் இந்திய சினிமாவில் வசூல் ராணியாக திகழ்ந்தவர் அனுஷ்கா. பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அனுஷ்காவின் படங்கள் சவால் விட்டிருக்கின்றன.

முன்னணி நடிகர்களுக்கு சவால் விட்ட அனுஷ்கா

தென் இந்தியாவைப் பொறுத்தவரை நடிகர்களுக்கு நிகரான ஒரு ரசிகர் பட்டாளத்தையும் மார்கெட்டையும் உருவாக்கியவர் நடிகை அனுஷ்கா. அவர் நடித்து 2009 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் உலகளவில் ரூ 70 கோடி வரை வசூலித்தது. இதே ஆண்டில் வெளியான கமலின் உன்னைப்போல் ஒருவன் திரைப்படம் ரூ 54 கோடி வசூலித்தது , விஜயின் வேட்டைக்காரன் திரைப்படம் ரூ 48 கோடி வசூலித்தது , சசிகுமாரின் நாடோடிகள் திரைப்படம் 35 கோடி வசூலித்தது. இதே ஆண்டில் சூர்யாவின் அயன் படமும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த அத்தனை படங்களைக் காட்டிலும் அருந்ததி அதிக வசூல் ஈட்டியது குறிப்பிடத் தக்கது.

தொடர்ந்து பாகமதி , ருத்ரமாதேவி ஆகிய படங்களிலும் அனுஷ்கா சோலோவாக நடித்தார். பாகமதி திரைப்படம் ரூ 64 கோடியும் , ருத்ரமாதேவி ரூ 82 கோடியும் வசூலித்தது.

காட்டி

அனுஷ்கா , விக்ரம் பிரபு நடித்துள்ள காட்டி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. கிரிஷ் ஜாகர்லமூடி இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பாக தெலுங்கில் வேதம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தமிழில் சிம்பு நடித்து வானம் என ரீமேக் செய்யப்பட்டது. த்ததமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. ஒருகாலத்தில் சோலோவாக முன்னணி நடிகர்களை ஆட்டம் காணவைத்த அனுஷ்கா நீண்ட இடைவேளைக்குப் பின் திரும்பியுள்ளார். செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் மற்ற படங்களுக்கு காட்டி படம் ஒரு வலுவான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.