கனரா வங்கியில் டிரைய்னி பணியிடங்கள்… மிஸ் பண்ணீடாதீங்க

3 months ago 5
ARTICLE AD

கனரா வங்கியில் டிரைய்னி பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க. தமிழ்நாட்டில் பயிற்சி பெற வாய்ப்பு. மிஸ் பண்ணீடாதீங்க.

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் முதன்மையான வங்கிகளில் கனரா வங்கி முக்கிய பங்கை பெற்றுள்ளது. அந்த வகையில், கனரா வங்கி செக்யூரிட்டீஸ் மெயின் வங்கியின் கீழ் செயல்படுகிறது. இங்கு சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் டிரைய்னி பதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தேசிய அளவில் பல்வேறு பகுதிகளில் உள்ள சென்டர்களில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை சென்டர் மற்றும் மதுரை சென்டரில் பல்வேறு பகுதிகளில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

வங்கியின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவில் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்த வாய்ப்பு சிறப்பாக அமைகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதால் பட்டதாரிகளுக்கு திறன் வளர்ச்சி உதவும். மேலும், பயிற்சி பெறும் நபர்களுக்கு மாத உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை  தாம்பரம்,  அண்ணாநகர், திருவள்ளூர், ஈரோடு, திருச்சி மற்றும் புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சி வாய்ப்பை பெற விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகப்படியாக 30 வயது வரை இருக்கலாம். துறை சார்ந்த அனுபவமுள்ளவர்களுக்கு அனுபவத்திற்கு ஏற்ப 10 வருடங்கள் தளர்வு வழங்கப்படும்.

ஆகஸ்ட் 31-ம் தேதியின்படி, விண்ணப்பதார்கள் கட்டாயம் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதார்களுக்கு கணினி திறன் அவசியமாகும். அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் டிரைய்னி பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.22 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும், செயல்பாடுகளுக்கு ஏற்ப மாதம் ரூ.2,000 கூடுதலாக வழங்கப்படும்.

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் பயிற்சி பெற விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். ஆன்லைன் அல்லது நேரடியாக நேர்காணல் நடத்தப்படலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் குறித்த விவரங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் https://www.canmoney.in/careers என்ற இணையதளத்தில் நேரடியாகவும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு முறையும் கட்டாயமாகும். விண்ணப்பத்தை உரிய தகவல்களுடன் பூர்த்தி செய்து, அனைத்து சான்றிதழ்களிலின் நகல்களின் சுய சான்றளிப்பு அளித்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நிலையில், அக்டோபர் 6-ம் தேதி மாலை 6 மணிக்குள் சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

Read Entire Article