கண்ணதாசன் முதல் ரோபோ சங்கர் வரை.. குடிப்பழக்கத்தால் உயிரைப் பறிகொடுத்த பிரபலங்கள்!

2 months ago 4
ARTICLE AD

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், பிரபல நகைச்சுவை நடிகராகவும் உலா வந்தவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் பலரும் குடிப்பழக்கத்தால் தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர். அந்த பிரபலங்கள் யார்? யார்? என்று கீழே காணலாம்.

கண்ணதாசன்:

தமிழ் திரையுலகின் காலத்திற்கும் அழியாத பல காவிய பாடல்களை அளித்தவர் கவிப்பேரரசர் கண்ணதாசன். தத்துவ பாடல்கள், காதல் பாடல்கள் என எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என தொடக்க கால தமிழ் சினிமா சூப்பர்ஸ்டார்களின் படங்களுக்கு பாடல்களை எழுதியவர். இன்று வரை கவிஞர்கள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் கண்ணதாசன் மது பழக்கத்தால் தனது உயிரை பறிகொடுத்தார். அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு 54 வயதிலே 1981ம் ஆண்டு காலமானார்.

சந்திரபாபு:

தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படுபவர் சந்திரபாபு. காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர், பாடகர், இயக்குனர், நடனக் கலைஞர் என பன்முகத் திறனோடு தமிழ் சினிமாவை கட்டியாண்டவர் சந்திரபாபு. எம்ஜிஆர், சிவாஜி என பல பிரபலங்களுடன் நடித்தவர். அப்போது, இவரது நடிப்பும் உடல்மொழியும் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக புகழப்பட்டது. மது பழக்கத்திற்கு அளவுக்கு அதிகமான அடிமையான இவர் கடன் பிரச்சினை, மன அழுத்தம் உள்ளிட்ட பல சிக்கல்களால் தன்னுடைய 46 வயதிலே மரணத்தை தழுவினார்.

சாவித்திரி:

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகையாக உலா வந்தவர் நடிகை சாவித்திரி. 50, 60களில் கொடிகட்டிப் பறந்த சாவித்திரி 138 தெலுங்கு படங்கள், 100 தமிழ் படங்கள், 6 கன்னட படங்கள், 5 இந்தி படங்கள், 3 மலையாள படங்களில் என மொத்தம் 252 படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் ராணியாக புகழப்பட்ட இவர் ஜெமினி கணேசனின் மனைவி.

குடும்ப சிக்கல், மன அழுத்தம், கடன் பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சாவித்திரி தன்னுடைய 47 வயதிலே 1981ம் ஆண்டு உயிரிழந்தார். மகாநதி, நடிகையர் திலகம் என்று இன்றும் இவர் போற்றப்படுகிறார்.

நாகேஷ்:

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் நாகேஷ். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், எஸ்பி முத்துராமன், ரஜினி, கமல், விஜய், அஜித் என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்தவர். 55, 60, 70-களில் தவிர்க்க முடியாத காமெடியனாக உலா வந்தவர். பின்னர், குணச்சித்திரம், வில்லன் என தனது பயணத்தை மாற்றி அதிலும் அசத்தியவர். மிகவும் பிரபலமான நடிகராக இருந்தும் குடிப்பழக்கத்தை தொடர்ந்து கொண்டே இருந்தார். 75 வயதில் காலமானார்.

சுருளிராஜன்:

தமிழ் சினிமாவின் முக்கியமான நகைச்சுவை நடிகராக உலா வந்தவர் சுருளிராஜ்ன். தனது வித்தியாசமான உடல்மொழி, வசன உச்சரிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். 1965ம் ஆண்டு முதல் நடித்து வந்த இவர் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சம்பளம் வாங்கும் அளவிற்கு முன்னணி நகைச்சுவை நடிகராக உலா வந்தவர். தனது அயராத உழைப்பால் 42 வயதிலே காலமானார். அவரது மரணத்திற்கும் முக்கிய காரணமாக இந்த மதுப்பழக்கம் அமைந்தது.

பாண்டியன்:

பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, மிகப்பெரிய கதாநாயகனாக உலா வந்தவர் பாண்டியன். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து 80, 90- களில் முன்னணி கதாநாயகனாக உலா வந்தவர். ஆனாலும், அவருக்கு அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம் இருந்தது. கதாநாயகனாக மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அசத்திய பாண்டியன் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்தால் உடல்நலம் குன்றி 48 வயதிலே உயிரிழந்தார்.

நா.முத்துக்குமார்:

தமிழ் சினிமாவின் காலத்திற்கும் போற்றும் கவிஞர் நா.முத்துக்குமார். இவரது பாடல்களுக்கு தமிழ் ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம். எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர் என பன்முகத் திறன் கொண்ட நா.முத்துக்குமாரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். தன்னுடைய மதுப்பழக்கத்தால் அவர் 41 வயதிலே காலமானார்.  குடிப்பழக்கத்தால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த முத்துக்குமாரின் மறைவு தமிழ் ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ரோபோசங்கர்:

குடிப்பழக்கத்தால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தற்போது ரோபோ சங்கரும் இணைந்துள்ளார். தனது தொடக்க காலத்தில் ஆஜானுபாகுவான உடல் தோற்றத்தில் இருந்த ரோபோ சங்கர் மிமிக்ரியால் முன்னணி நடிகராக முன்னேறினார். ஆனால், குடிப்பழக்கத்தால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு அதன் பின்னர் குடிப்பழக்கத்தை கைவிட்டாலும், அவர் பறிதாபமாக 46 வயதிலே காலமாகிவிட்டார்.

தமிழ் சினிமாவின் மேலும் பல பிரபலங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குடிப்பழக்கத்தால் தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர்.

Read Entire Article