கணவரைக் கொன்று கள்ளக் காதலனுடன் சேர்ந்து ஆபாச வீடியோ பார்த்து உல்லாசமாக இருந்த பெண் !!

2 months ago 11
ARTICLE AD

இளைஞருடன் பெண்ணுக்கு ஏற்பட்ட கள்ளக் காதல்

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுவூரைச் சேர்ந்தவர் சிவ நாகராஜி (வயது 45). இவரது மனைவி லட்சுமி மாதுரி (37) இவர் சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். லட்சுமி மாதுரிக்கு, கார் டிரைவர் கோபி ( வயது 35 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவரைத் திட்டமிட்டு வெளியூருக்கு வேலைக்கு அனுப்பியுள்ளார் லட்சுமி மாதுரி. வெளியூருக்கு கணவரை அனுப்பி விட்டு , கள்ளக் காதலன் கோபியுடன்  உல்லாசமாக இருந்து வந்துள்ளார். கணவர் மீண்டும் ஊருக்கே வந்து தொழில் செய்யத் தொடங்கியதால் , தங்களது சந்திப்பிற்கு அவர் தடையாக இருப்பதாக லட்சுமி மாதுரி கருதியுள்ளார்.

தலையணையை அழுத்து கொன்ற மனைவி

லட்சுமி மாதுரி கணவருக்கு பிரியாணி சமைத்துக் கொடுத்துள்ளார். அதில் 20 தூக்க மாத்திரைகளை அரைத்துக் கலந்துள்ளார். அதைச் சாப்பிட்ட நாகராஜி ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் இரவில் கள்ளக் காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். கோபி , நாகராஜிவின் மார்பில் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொள்ள, லட்சுமி மாதுரி தலையணையால் முகத்தை அழுத்தி கணவரைக் கொலை செய்துள்ளார்.

கணவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, இருவரும் பயப்படவோ அல்லது அங்கிருந்து தப்பிக்கவோ முயலவில்லை. மாறாக அதிகாலை வரை லட்சுமி மாதுரி தனது கள்ளக் காதலனுடன் அமர்ந்து செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்து ரசித்துள்ளார். அதன் பின்னரே கோபி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தந்தைக்கு ஏற்பட்ட சந்தேகம்

அதிகாலையில் கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறி லட்சுமி மாதுரி அழுது நாடகமாடியுள்ளார். இறுதிச் சடங்கின் போது நாகராஜிவின் காதில் இரத்தம் வழிந்ததும், மார்பு எலும்புகள் உடைந்திருப்பதைப் பார்த்தும் அவரது தந்தைக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் இது குறித்து புகாரளிக்க, பிரேதப் பரிசோதனையில் அவர் மூச்சுத்திணறி இறந்தது உறுதியானது. லட்சுமி மாதுரியின் செல்போனை ஆய்வு செய்த போது, அவர் கோபியுடன் பேசியதும், கொலைக்குப் பின் ஆபாசப் படங்களைப் பார்த்ததும் ஆதாரங்களுடன் சிக்கியது. பின் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Read Entire Article