கணவனை பக்கா ஸ்கெட்ச் போட்டு கொன்ற மனைவி..இன்ஸ்டா கள்ளக்காதலால் நடந்த கொடூரம்

5 months ago 4
ARTICLE AD

வாணியம்பாடி அருகே கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி உட்பட 5 பேரை கைது செய்து திம்மம்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருமணத்திற்கு மீறிய உறவை வைத்து கொண்டு  இன்ஸ்டாகிராமில்  பழகி இளைஞருடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது போலிசார் விசாரணையில் அம்பலமானது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலா என்பவருடன் திருமணம் ஆகி 3 வயதில் குழந்தை உள்ள நிலையில்,  கடந்த 17.03.2025 அன்று விஜயன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த போதே அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி வெண்ணிலா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திம்மாம் பேட்டை போலீசார் விஜயனின் மரணத்தை  சந்தேக மரணம் என  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விஜயனின் மரணம் குறித்து  பிரேத பரிசோதனை மருத்துவ அறிக்கையில் விஜயன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என  மருத்துவ அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்  வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை போலீசார்  விஜயனின் உறவினர்கள் மற்றும் அவரது மனைவி வெண்ணிலாவிடம்  தீவிர விசாரணை மேற்க்கொண்டு, வெண்ணிலா மற்றும் விஜயனின் செல்போன்களை ஆய்வு செய்து, வெண்ணிலாவிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர்.

விஜயனின் மனைவி வெண்ணிலா என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த சஞ்ஜெய் என்பவருடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்நிலையில் சஞ்ஜெய் சிங்கப்பூர் சென்றுள்ளார் வெண்ணிலா சஞ்ஜெயுடன் வாழ ஆசைப்பட்டு, விஜயனை கடந்த 17.03.2025 அன்று  அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சபரிவாசன் அழகிரி, நாயனசெருவு பகுதியை சேர்ந்த சக்திவேல், நந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து வெண்ணிலா, விஜயனை கை, கால், கட்டி வைத்து தலையணையால், விஜயனின் முகத்தில் அழுத்தி அவரை கொலை செய்தது போலீசார்  விசாரணையில் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து சந்தேக மரணத்தை கொலை வழக்காக திம்மாம்பேட்டை போலீசார்  மாற்றி விஜயனை கொலை செய்த அவரது மனைவி வெண்ணிலா மற்றும் கொலை உடந்தையாக செயல்பட்ட சக்திவேல், நந்தகுமார், சபரிவாசன், அழகிரி ஆகியோரை திம்மாம்பேட்டை போலீசார் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி  திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொண்டு இளைஞர்களுடன் சேர்ந்து  கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article