விழுப்புரம்: செஞ்சியில் கள்ளத்தொடர்பில் கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த கள்ளக்காதலர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து திண்டிவனம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

கணவனை கொலை செய்ய முயன்ற கள்ளக்காதலர்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் இவர் சென்னையில் தங்கிய தனியார் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார் கடந்த 2022-ஆம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த சசிகலா முத்து செல்வம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சென்னையில் இருந்து மாதம் இரு முறை வீட்டுக்கு வருவது வழக்கம் இதனால் தனது மனைவியை பெற்றோர் பாதுகாப்பில் விட்டுள்ளார், இந்த நிலையில் சத்யராஜ் மனைவிக்கும் அவரது எதிர் வீட்டில் இருக்கும் ஜானகிராமனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் சதி திட்டம் தீட்டி கடந்த 2023-ஆம் ஆண்டு சத்யராஜ் மனைவி சசிகலா தனக்கு வேலை கிடைத்துள்ளதாக கூறி கணவரை சென்னையில் இருந்து நாட்டார்மங்கலம் வந்து இறங்கச் சொல்லிவிட்டு நாட்டாமங்கலத்தில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு செல்லும் போது முடையூர் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது தனக்கு இயற்கை உபாதை வருவதாக கூறி அங்கே இறங்கி உள்ளார்.

கீழே சென்று சசிகலா முத்து செல்வம் தனது கணவரை கீழேவரச் சொல்லி உள்ளார் அப்பொழுது அங்கே ஏற்கனவே மறைந்திருந்த சசிகலாவின் கள்ளக்காதலன் ஜானகிராமன் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் சத்யராஜின் கழுத்தை கத்தியால் கரகரவென அறுத்துவிட்டு சத்யராஜ் இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர், ஆனால் சத்யராஜ் பலத்த காயமடைந்து ஆற்றுப்பாலத்திற்கு மேலே வந்து தன்னை காப்பாற்றுமாறு அங்கு சென்றவர்களை கூப்பிட்டு உள்ளார் அங்கிருந்தவர்கள் இவரை செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இந்த நிலையில் சத்தியராஜ் தன் மனைவி மற்றும் கள்ளக்காதல் ஜானகிராமன் ஆகிய இருவரும் தன்னை கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியதாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர், இந்த வழக்கானது திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்குக்கான தீர்ப்பு அளிக்கப்பட்டது,

இதில் முதல் குற்றவாளியான சசிகலாவின் கள்ளக்காதலன் ஜானகிராமனுக்கு ஆயுள் தண்டனையும் 15 ஆயிரம் அபராதம் மற்றும் சத்யராஜின் மனைவி இரண்டாவது குற்றவாளியான சசிகலா முத்து செல்வத்திற்கு ஆயுள் தண்டனை, மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் அபராதம் கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.