கடைசி போட்டியில் சீறிய சென்னை.. சுயரூபத்தை காட்டிய ப்ரீவிஸ்.. தில்லாக ஆடுவாரா கில்?

6 months ago 5
ARTICLE AD

கடைசி போட்டியில் சிறப்பாக ஆடிய சென்னை அணி 230 ரன்களை குவித்துள்ளது. மாத்ரே தொடங்கி கான்வே, ப்ரீவிஸ் என அனைவருமே சிறப்பாக ஆடினார்கள்.

கடைசி போட்டியில் சீறிய சென்னை:

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடருக்கான தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம். எஸ். தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

அதன்படி களத்தில் இறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினர். குறிப்பாக, மாத்ரே அதிரடியாக விளையாடினார். 17 பந்துகளில் 34 ரன்களை எடுத்த அவர் பிரசித் கிருஷ்ணா பந்தில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

சுயரூபத்தை காட்டிய ப்ரீவிஸ்:

பின்னர் வந்த உர்வில் படேல், ஷிவம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாட ஒருமுனையில் கான்வே பொறுப்புடன் விளையாடினார். அரைசதம் கடந்த கான்வே 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இறங்கிய ப்ரீவிஸ், குஜராத் பந்துவீச்சாளர்களை நாலா புறமும் சிதறடித்தார்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 230 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ப்ரீவிஸ் 57 ரன்களை அடித்தார். குஜராத் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்றைய போட்டியில் 231 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றால் குஜராத் அணி முதல் இடத்திற்கு முன்னேறக்கூடும்.

முதல் 2 இடம் யாருக்கு?

நடப்பு தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜரத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஆனாலும், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இரண்டு வாய்ப்புகளை வழங்கக் கூடிய, புள்ளிப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களை ஆக்கிரமிக்கப்போவது யார் என்பது தற்போது வரை உறுதியாகவில்லை.

குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அந்த இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து இரண்டு அணிகளும் தோல்வியுற்று ஷாக் அளித்தன. அதேபோல நேற்றைய போட்டியில், டெல்லி அணியிடம் பஞ்சாப் தோல்வியுற்றது. இதனால், முதல் 2 இடங்களை பிடிக்கப்போவது யார் என்பதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது.

Read Entire Article