கடைசி இடம் வேணாம்! அசிங்கப்படாமல் தப்புமா மஞ்சள் படை? டாஸ் வென்ற ராஜஸ்தான்

7 months ago 5
ARTICLE AD

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அசிங்கப்படாமல் தப்புமா மஞ்சள் படை?

இரு அணிகளும் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், அடுத்த ஆண்டிற்கான பயிற்சி ஆட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. போட்டியின் முடிவுகள் பிளே-ஆஃப் கணக்குகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

அதேநேரம், சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதை தவிர்க்க இன்றைய போடிட்யில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அப்படி வெற்றி பெற்றால் 9வது இடத்திற்கு முன்னேறக்கூடும். இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

அதில் சென்னை அணி 16 முறையும், ராஜஸ்தான் 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் அதிகபட்சமாக சென்னை 246 ரன்களையும், குறைந்தபட்சமாக 109 ரன்களையும் பதிவு செய்துள்ளது.

சென்னை அணி விவரம்: ஆயுஷ் மாத்ரே, டெவோன் கான்வே, உர்வில் படேல், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தோனி(w/c), அன்ஷுல் கம்போஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, கலீல் அகமது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, டெல்லி அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நாளை வான்கடே மைதானத்த்தில் நடைபெற உள்ளது. இதில் மும்பை அணி வெற்றி பெற்றால், 16 புள்ளிகளை பெற்று பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும். ஒருவேளை தோல்வியுற்றால், பஞ்சாப் அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் வெற்றி பெறுவதோடு, டெல்லி அணி தனது கடைசி லீக் போட்டியில் தோல்வியுற்றால் தான் மும்பையால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

டெல்லி அணியை பொறுத்தவரையில் தனக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். இல்லையெனில் ஏதேனும் ஒரு போட்டியில் வென்று, மும்பை அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வி காண வேண்டும்.

Read Entire Article