மதுரையில் வெயில் புழுக்கத்தால் மாடிக்கு தூங்கச் சென்றவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் எங்கு திரும்பினாலும் கடும் வெயில் - பொதுமக்கள் அவஸ்தை

இந்திய அளவில் மதுரையில் வெப்பம் அதிகளவு வீசுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மதுரை விமான நிலையம், கள்ளிக்குடி, திருமங்கலம், அலங்காநல்லூர், உசிலம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி என மாநகரை சுற்றியுள்ள பகுதியிலும், செல்லூர், காந்திமியூசியம், ஐயர்பங்களா, கண்ணனேந்தல், ஜவகர்புரம் என மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 106 டிகிரி வரை வெயில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவஸ்தைப் பட்டு வருகின்றனர். நிழல்களை தேடி பொதுமக்கள் அழைந்து வருவது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரையில் வெயில் புழுக்கத்தால் மாடிக்கு தூங்கச் சென்றவர் தவறி விழுந்து, உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்

மொட்டைமாடியில் அமர்ந்திருந்த நபர் அங்கிருந்து தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுரை கரிமேடு மோதிலால் 2 -வது தெரு சண்முகாநகரைச் சேர்ந்தவர் சதீஸ் குமார் (27). கட்டடம் கட்டும் தொழில் செய்துவரும், இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இரவு வீட்டில் படுத்திருந்த சதீஸ்குமார் வீட்டில் புழுக்கமாக இருப்பதாகக்கூறி 2- வது மாடிக்கு தூங்கச் செல்வதாகக் தெரிவித்துச் சென்றுள்ளார். அங்கு நள்ளிரவில் மொட்டைமாடியில் அமர்ந்திருந்த அவர், அங்கிருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மனைவி மீனாட்சி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மறுநாள் காலையில் வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டின் வாயிலில் சதீஸ்குமார் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் கரிமேடு காவல்நிலைய காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக அவரது மனைவி மீனாட்சி அளித்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் வெயில் புழுக்கத்தால் மாடிக்கு தூங்கச் சென்றவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - KL Rahul: RCB-க்கு வரப்போறீங்களா? ரசிகர் கேட்ட கேள்வி! கே.எல்.ராகுல் கொடுத்த பதில்! வைரல் வீடியோ

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "கடைசி முறையா கூப்பிடுறேன்" பேச்சுவார்த்தைக்கு அழைத்த மம்தா.. முடிவுக்கு வருமா மருத்துவர்கள் போராட்டம்