கடலூர் இளைஞர்களே! விரைவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: மிஸ் பண்ணிடாதீங்க...!

6 months ago 11
ARTICLE AD

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 26.09.2025 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து இம்மாதம் 26.09.2025 வெள்ளிக்கிழமை அன்று கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த முகாமில் இளைஞர்கள் வந்து கொண்டு பங்கு பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு

இம்முகாமில் 15ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

கல்வித்தகுதி

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு (SSLC), பன்னிரண்டாம் வகுப்பு (HSC), ஐடிஐ (ITI), டிப்ளமோ (Diploma), பட்டப்படிப்பு (Degree) படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம் குறித்த மேலும் விவரங்களுக்கு

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கடலூர் மாவட்டம் மற்றும் 04142-290039, 9499055908 என்று தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். பள்ளிக் கல்வித்தகுதி அல்லது பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு பணி வாய்ப்பை பெறலாம்.

இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் .சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Read Entire Article