சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ன ரெடியாகிட்டீங்களா? ஊர்க்காவலில் கடலோர காவல் பாதுகாப்பு படையில் சேர கடல் நீச்சல் தெரிந்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு கடலில் நீச்சல் அடிக்க தெரிந்தால் விண்ணப்பத்தை தட்டி விடுங்க.

கடலோர காவல் பாதுகாப்பு படையில் ஊர்காவலராக இளைஞர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாத, கடலில் நீச்சல் தெரிந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் இதர விவரங்களை கீழே முழு விபரங்களுடன் உள்ளது.

விண்ணப்பதார்கள் குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சென்னை பெருநகர கடலோர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவராகவும் மற்றும் மெரினா கடற்கரை காவல்நிலையத்திற்கு 20 கி.மீ சுற்றளவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதார்கள் மீனவ இளைஞர்களாக இருக்க வேண்டும். மீனவர்கள் அடையாள அட்டையை சம்பந்தப்பட்ட மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொறுத்தவரை, 01.08.2025 தேதியின்படி 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அதே போன்று, 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். கடல் நீச்சல் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

கவ்லித்தகுதியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். கடலோர பாதுகாப்பு படையில் ஊர்காவலராக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். தினசரி 1 மணி நேரம் என்ற விதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர் கடலோர காவல் பாதுகாப்பு படையுடன் இணைந்து பணிபுரிவார்கள். ஊர்காவலர்கள் மெரினா கடற்கரை காவல்நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

ஊர்காவலராக தேர்வு செய்யப்படும் நபர்கள் இரவு ரோந்து பணி மற்றும் பகல் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். ரோந்து பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்.

மேல் குறிப்பிட்டுள்ள தகுதிக்கு உட்பட்டவர்கள் இதற்கான விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுகொள்ளலாம். விண்ணப்பத்திற்கு கட்டணம் கிடையாது. இலவசமாக பெற்றுகொள்ளலாம். முழுமையான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி: சென்னை பெருநகர ஊர்க்காவல்படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை - 15. தொலைபேசி எண்கள் - 9566776222, 9498135373.

ஆர்வமுள்ள மீனவ இளைஞர்கள் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான ஆவணங்களை வரும் செப்டம்பர் 30.09.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை கடலோர காவல் பாதுகாப்பு படையில் ஊர்காவலராக சேர விரும்பும் மீனவ இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இப்பணிக்கான கூடுதல் விவரங்களை ஊர்காவல்படை அலுவலகத்தில் அறிந்துகொள்ளலாம்.