ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்சியுடன் வந்து வாக்களித்துள்ளார்.

ஜனநாயக கடமையாற்றிய தோனி:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜார்க்கண்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று 43 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் இந்தியா பிளாக் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ஆட்சியை தக்க வைக்க இந்தியா கூட்டணியும் ஆட்சியை பிடிக்க பாஜக கூட்டணியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. காலை 7 மணியில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி 59.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்சியுடன் வந்து வாக்களித்துள்ளார்.

#BreakingNews

Star cricketer MS Dhoni along with his wife, Sakshi arrives at a polling booth in Ranchi to cast his vote for #JharkhandAssemblyElections2024 pic.twitter.com/QVbX2AxT4n

— Surbhi (@SurrbhiM) November 13, 2024

முதற்கட்ட வாக்குப்பதிவான இன்று 43 தொகுதிகளில் 609 ஆண்கள், 73 பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தக் கட்டத்தில் 6 அமைச்சர்கள் மற்றும் பல முக்கிய தலைவர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் உள்ளிட்டோரும் அடங்குவர்.