கடந்த ஆண்டை மிஞ்சிய கோவை தேர்ச்சி விகிதம் – மாணவிகள் அசத்தல்

2 weeks ago 4
ARTICLE AD

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 37 ஆயிரத்து 844 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதில் 36 ஆயிரத்து 742 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 97.09 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தேர்வு எழுதியவர்களில் 18 ஆயிரத்து 506 மாணவர்கள் மற்றும் 19 ஆயிரத்து 338 மாணவிகள் இடம்பெற்றிருந்தனர். இதில் 17 ஆயிரத்து 760 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தரப்பில் 18 ஆயிரத்து 952 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.47 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியிருந்தது. இந்த ஆண்டு அது 97.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேலும் உயர்த்த பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டதன் பலனாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகங்கள் மற்றும் கல்வித்துறை சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

Read Entire Article