கடக கடலில் 'சூரியன்'; கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்; ராசிகளுக்கான பலன்கள் இதோ!

1 year ago 7
ARTICLE AD

ஜூலை மாதம் 16-ம் தேதி கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சி ஆகிறார். சூரியன் உயிர்களின் ஆதாரம்.  பெயர்ச்சியாகும் சூரியனால் உங்களுடைய ராசிக்கு பலன்களை காணலாம்.

மேஷ ராசி :

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே சூரியன் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் பெயர்ச்சியாவது உங்களுக்கு மிகப்பெரிய பண வரவை உண்டாக்கும். குறிப்பாக குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் உங்களின் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும் . வயிறு சம்பந்தமான தொந்தரவு இருந்தவர்களுக்கு மருத்துவத்தின் மூலம் அது குணமாகும் .  நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நண்பரை சந்திக்கலாம்.

ரிஷப ராசி:

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன்.  தைரியம் கூட போகிறது சபைகளில் நீங்கள் பேசுவதை மற்றவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள்.  தன வரவு தாராளமாக உண்டு இளைய சகோதரர்களின்  உதவி கிடைக்கும்.  மாமனார் மாமியார் வழி ஆதாயம் உண்டு.  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.  தொழிலில் முன்னேற்றம் உண்டு.

மிதுன ராசி :

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன் பெயர்ச்சியாவது மிகப்பெரிய ஏற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும் குறிப்பாக குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் குடும்பத்தாரோடு நேரம் செல்வதற்கான காலகட்டம் இது.  பகைவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.  பிரிந்து இந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள்.  வழக்குகளில் உங்களுக்கு வெற்றி சாதகமாக வரும்.  பண வரவு தாராளமாக இருக்கும்.

கடக ராசி:

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சூரியன் இரண்டாம் அதிபதி  ராசியிலேயே வைத்திருப்பது மிகப்பெரிய யோகத்தைக் கொண்டு வரும்.  குறிப்பாக சபைகளில் நீங்கள் புகழப்படுவீர்கள்.  எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.  மற்றவர்கள் உங்கள் மீது அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்துவார்கள்.  முன்னோர்களின் ஆசிர்வாதம் உண்டு.  தெய்வங்களின் அனுகூலம் ஏற்படும். கைக்கு வர வேண்டிய பணம் வரும்.

சிம்ம ராசி:

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  பன்னிரண்டாம் வீட்டில் சூரியன் இருப்பது நீண்ட தூர பிராயணங்களை மேற்கொள்ள வைக்கும்.  நிம்மதியான உறக்கம் வரும்  பணம் எப்படி உங்கள் கையில் இருந்து செலவாகிறது என்பதை புரிந்து கொள்வீர்கள்.  உங்களின் ஆலோசனைகளை மற்றவர்கள் கேட்டு நடப்பார்கள்.  வியாபாரத்தில் பண வரவு உண்டு.  முதலீடுகளால் ஆதாயம் உண்டு.  தொழில் மாற்றம் இருந்தால்  அதுவும் சாதகமாக அமையும்.

கன்னி ராசி:

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  பதினொன்றாம் வீட்டில் லாபஸ்தானத்தில் சூரியன் இருப்பது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொண்டு வரும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் நிற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.  உணவு கடை  வைத்திருப்பவர்கள் காய்கறி கடை வைத்திருப்பவர்கள்  நல்ல லாபம் கிடைக்கும்.   கௌரவம் புகழ் கூடும்.  பெரியோர்களின் ஆசிர்வாதம் உண்டு.  விட்டுப்போன சொந்தங்கள்  தானாக வந்து பேசுவார்கள்.  பண வரவு தாராளமாக இருக்கும்.

துலாம் ராசி :

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் இருப்பது மிகப்பெரிய தொழிலில் முன்னேற்றத்தை கொண்டு வரும்.  தர்மஸ்தானத்தில் சூரியன் அமரும் போது  புத்திரர்கள் வழி ஆதாயம் உண்டு.  நீங்கள் செய்யும் வேலையால் மற்றவர்களிடத்தில் இருந்து பாராட்டை பெறுவீர்கள்.  உறவினர்களின் வருகை இருக்கும்.  நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள்.  அரசு வழி ஆதாயம் உண்டு.

விருச்சக ராசி :

அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டில் சூரியன் அமர்ந்திருக்கிறார் ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டிய காலகட்டம்.  மற்றவர்களின் ஆலோசனை பெற்று வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை எடுத்து வைப்பீர்கள்.  நிம்மதியான உறக்கம் வரும்.  தந்தை யாருடன் உறவு இணக்கமாக இருக்கும்.  முன்னோர்களின் சொத்து சம்பந்தமாக உங்களுக்கு நல்லது நடக்கும்.  இடம் வீடு மனை போன்றவற்றால் ஆதாயம் உண்டு.  திருமண பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும்

தனுசு ராசி:

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  எட்டாம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பது திடீர் அதிர்ஷ்டம் தன வரவை கொண்டு வரும்.  மிகப்பெரிய யோகா காரணமான சூரியன் உங்களுக்கு எட்டாம் வீட்டில் இருப்பது  குபேர யோகத்தை கொடுக்கும்.  குறிப்பாக மற்றவர்களின் பணம் தான் எட்டாம் பாவம் என்பதால் வியாபாரத்தில் வாடிக்கையாளரை நம்பி இருப்பவர்களுக்கு பணம்  மலையாள கொட்ட வாய்ப்பு உண்டு.  நீண்ட நாட்களாக சந்திக்க நினைக்கும் நண்பரை சந்திப்பீர்கள்.  சாதகமான மாதமாக இருக்கிறது.

மகர ராசி:

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன்.  திருமண பேச்சு வார்த்தைகள் அடுத்த கட்டத்திற்கு நகரும்.  பிள்ளைகள் வழியா ஆதாயம் உண்டு.  உங்களைப் புரிந்து கொள்ளாமல் விட்டு சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.  கூட்டு வியாபாரம் வெற்றியை தரும்.  தொழிலில் முதலீடு போட்டு இரட்டிப்பு லாபத்தை பார்க்கலாம்.   வாழ்க்கை துணையிடம் சற்று கவனமாக நடந்து கொள்ளுங்கள்.  சிறிய பேச்சு வார்த்தை கூட பெரிய சண்டையில் முடிய வாய்ப்புண்டு.  பண வரவு தாராளமாக இருக்கும்.

கும்ப ராசி:

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன்.  ஏழாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருப்பது மிகப்பெரிய யோகத்தை கொண்டு வரும்.  அரசு தேர்வு எழுதி  உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி செவிகளுக்கு வந்து சேரும்.  அரசு வழி ஆதாயம் உண்டு.  நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு வரும்.  வங்கி கணக்கில் சேமிப்பு உயரும்.  தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.  புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் அதிலும் சாதகமான பலன்களே வரும்.

மீன ராசி:

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 5 ஆம் வீட்டில் சூரியன்.  புகழ் கீர்த்தி என்று சொல்லக்கூடிய பாவத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால் மற்றவர்களுக்கு ஒளிவிளக்காக திகழ்வீர்கள்..  உங்களைப் பார்த்து மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொள்வார்கள்.  வெகு தொலைவில் இருப்பவர்கள் கூட உங்களைப் பற்றி நல்லபடியாக பேசுவார்கள்.  புதிர்களால் ஆதாயம் உண்டு.  நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்  சமுதாயத்தில் புகழ் அந்தஸ்து கீர்த்தி உயரும்.  வருமானம் உயரக்கூடிய காலகட்டம்.

Read Entire Article