கஞ்சா வழக்கில் கைது என மிரட்டல்

சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் திவ்யா மற்றும் தினேஷ், திவ்யா கணவர் திணேஷ் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே ஒரு கஞ்சா வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வியாசர்பாடி காவல் நிலையத்தில் உள்ள இரண்டு காவலர்கள் தன் கணவரிடம் தொடர்ந்து மிரட்டும் தொனியில் பேசி வருவதாக கூறி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார்.

அப்பொழுது, தன் கைப் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அப்பகுதியில் இருந்த காவலர்கள் திவ்யா உடல் மீது தண்ணீர் ஊற்றினர்.

அப்பொழுது பேசிய அவர்,

வியாசர்பாடி பகுதியில் கஞ்சா விற்பவர்கள் பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும் , இல்லையென்றால் தன் கணவர் மீது பொய் வழக்கு போட்டு விடுவதாக காவல் துறையினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். கஞ்சா விற்பவர்கள் பற்றிய விசாரணையை மேற்கொள்ள வேண்டிய காவல் துறையினர், இது போன்று மிரட்டும் செயலில் ஈடுபடுவது தன் குடும்பத்தினருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட திவ்யா வேதனை தெரிவித்துள்ளார்.

வீடு கட்டுமானத்திற்கு கொடுத்த பணத்தை, லட்சக் கணக்கில் மோசடி செய்த நபர்

சென்னை பெரம்பூர் கோபால் காலனி மேற்கு மெயின் ரோட்டில் வசித்து வரும் ராபர்ட் வில்லியம் ( வயது 62 ) என்பவர், தான் வெளிநாட்டு இந்தியர் என்றும் தனக்கு சொந்தமாக மடிப்பாக்கம் பகுதியில் உள்ள நிலத்தில் வீடு கட்டுவதற்கான பொறுப்பை தனது சகோதரி மகன் ஜேசு ஆனந்த் என்பவரிடம் கொடுத்ததாகவும் , இதற்காக ஜேசு ஆனந்த் தன்னிடம் அதிகமான பணம் கேட்டு பெற்று பாதி பணத்தை அபகரித்ததாகவும் , மேலும் வீட்டின் நான்கு குடியிருப்புகளை தனக்கு தெரியாமல் 4 நபர்களுக்கு ரூ.8 லட்சம், 8.5 லட்சம், 9 லட்சம், 6.5 லட்சம் என மொத்தம் ரூ.32 லட்சம் பணத்திற்கு குத்தகைக்கு விட்டு மோசடி செய்துள்ளதாகவும் , S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் , போலீசார் மோசடி பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் புகார் தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததின் பேரில் , காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வேலூர் பகுதியில் பதுங்கியிருந்த இவ்வழக்கில் தொடர்புடைய ஜேசு ஆனந்த் ( வயது 38 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 செல்போன்கள், 1 லேப்டாப், போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஜேசு ஆனந்த் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.