கஞ்சா குற்றவாளிகளுடன் தொடர்பு! 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

6 months ago 7
ARTICLE AD

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கஞ்சா குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த இரண்டு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரவணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கஞ்சா விற்பனையாளரிடம் போலீஸ் தொடர்பு

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி திஷாமிட்டல் உத்தரவின் பெயரில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கஞ்சா விற்பனையாளர்களை அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதிரடி நடவடிக்கையால் நாள்தோறும் பல்வேறு காவல் நிலையத்தில் கஞ்சா குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கஞ்சா குற்றவாளிகளின் தொலைபேசி எண் கொண்டு அவர்களின் தற்போதைய நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட காவல் கண்கானிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

ஆயுதப்படைக்கு தூக்கி அடித்த எஸ்பி சரவணன்

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு கஞ்சா வியாபாரிகளின் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் தீனதயாளன், தேவநாதன், உள்ளிட்ட இரண்டு பேர் கஞ்சா விற்பனையாளர்களுடன் தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசிக்கொண்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இரண்டு பேரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் இரண்டு பேரையும் அதிரடியாக ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுடன் பழக்கத்தில் இருக்கும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article