குழந்தைகள் பாதுகாப்பு, ஆள்கடத்தல் தடுப்பு ஆகிய முயற்சிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விரைவான, ஒருங்கிணைந்த நடவடிக்கையாக, கடந்த மே 13ஆம் தேதி, ரக்சவுல் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் முயற்சியில் இருந்து நான்கு மைனர் சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

கஜினி படத்தில் வரும் அதே சம்பவம்:

கஜினி படத்தில் வருவது போன்று பீகார் மாநிலத்தில் உள்ள ரக்சவுல் ரயில் நிலையத்தில் இருந்து சிறுமிகள் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடத்தல் தொடர்பான தகவல்களின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்புப் படைக் குழுவின் கடத்தல் தடுப்பு பிரிவு, அரசு சாரா நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன், ரக்சவுல் - ஆனந்த் விஹார் சத்யாக்ரா விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டது.

அப்போது, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகள் மீட்கப்பட்டனர். வேலை வாங்கி தருவதாகவும் காணாமல் போன உறவினர்களை கண்டுபிடித்து தருவதாக பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, அந்த சிறுமிகள் நேபாளத்திலிருந்து கடத்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்களின் பயணம் குறித்து அவர்களின் குடும்பங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சிறுமிகளை காப்பாற்றிய RPF வீரர்கள்:

விரைவான நடவடிக்கை காரணமாக, சிறுமிகளுடன் பயணித்த, கடத்தலில் ஈடுபட்ட நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். பின்னர், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கடத்தப்பட்ட சிறுமிகள் ஒப்படைக்கப்பட்டனர்.

➡️Railway Protection Force’s (RPF) Foils Human Trafficking Bid at Raxaul; Rescues 4 Minor Girls Under Operation AAHT

➡️RPF-GRP-SSB-Childline-NGO Team Rescues Nepal-Origin Minors from Satyagrah Express; Trafficker Nabbed, FIR Lodged

➡️Victims Lured on False Promises of Job and… pic.twitter.com/DwKPnE128J

— PIB India (@PIB_India) May 16, 2025

இதுகுறித்து இந்திய நியாய சட்டத்தின் சிறார் நீதி சட்டம், குழந்தை தொழிலாளர் தடை சட்டம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆள் கடத்தலுக்கு எதிராக ரயில்வே பாதுகாப்புப் படை உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அந்தப் படையின் தலைமை இயக்குநர் மனோஜ் யாதவ் கூறியுள்ளார். ஆள்கடத்தல் தொடர்பான புகார்களை 139 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.