கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழா மார்ச் 14, 15 ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. மார்ச் 14 அன்று மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. மார்ச் 15 அன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலி பூஜையும், கூட்டுப் பிரார்த்தனையும். இதனை தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா முடிவடைகிறது. இந்த விழாவுக்கு பொதுமக்களை அழைத்து செல்லும் படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.