"ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய" ...காஞ்சி ஶ்ரீ மஹா ருத்ரேஸ்வரர் கும்பாபிஷேக விழா கோலாகலம்

1 year ago 6
ARTICLE AD

காஞ்சிபுரம் அருகே உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ மாணிக்க விநாயகர் மற்றும் ஶ்ரீ மஹா ருத்ரேஸ்வரர்  திருக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பொது மக்கள் கலந்துக் கொண்டு சுவாமி திரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் மாதனம் பாளையம் தெருவில் உள்ள பழமையான  அருள்மிகு ஶ்ரீ மாணிக்க விநாயகர் மற்றும் காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு ஶ்ரீ மஹா ருத்ரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் புரணமைக்கும் பணி நிறைவடைந்தது , தொடர்ந்து மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி இன்று காலை கணபதி பூஜை, மங்கல இசையுடன் கோ பூஜை நடைபெற்றது.

மகா கும்பாபிஷேக விழா

இரண்டாம் கால யாக சாலை மேளத்தாளங்களுடன் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட  புனித நீர் அடங்கிய கலச குண்டங்கள் ராஜ கோ
புர விமானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு ராஜ கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டும், பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டும், மஹா கும்பாபிஷேகமானது  வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பின் மூலவர் மஹா கணபதி மற்றும் ருத்ரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். இந்த மஹா கும்பாபிசேக விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானங்களும், அருட் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

கும்பாபிஷேகம் (Kumbabhishekam) என்றால் என்ன ?

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முன்னோர் வாக்கு  அப்படி   கட்டி முடிக்கப்பட்ட கோயில்களுக்கு,  கும்பாபிஷேகம் நடத்துவது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. கும்பாபிஷேகம் ( அ) குடமுழுக்கு விழா ( அ ) நன்னீராட்டு பெருவிழா, ஒவ்வொரு இந்து கோவிலிலும் 12  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு நடத்த வேண்டும் என நம்பப்படுகிறது. இவ்வாறு கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது கோவில் கருவறையில் உள்ள கடவுள்களுக்கு சக்தி புதுவிக்கப்படுவதாகவும், தெய்வத்தன்மை அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடத்தில் பல்வேறு நீர் நிலைகளில் கொண்டுவரப்பட்ட நீரை நிரப்பி  பல்வேறு மூலிகைகள் ஆன்மீகச் சார்ந்த பொருட்கள் கலக்கப்பட்டு, சில நாட்கள் மாபெரும் யாகம் வளர்க்கப்படும். எவ்வாறு வளர்க்கப்படும் யாகசாலையில், பல்வேறு ஆன்மீகப் பொருட்கள் மூலம் வேள்வி வளர்க்கப்பட்டு மந்திரங்கள் உற்சவிக்கப்படும். இவ்வாறு கூறப்படும் மந்திரத்தால் புனித நீர் சக்தி பெறுவதாக நம்பப்படுகிறது.

இந்த புனித நீரை கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது, குறிப்பிட்ட நன்னாளில் ஊற்றும் பொழுது அந்த கலசங்கள் சக்தி பெற்று, அதன் மூலம் கருவறையில் உள்ள தெய்வத்திற்கு சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கும்பாபிஷேகத்தை வருடத்திற்கு மூன்று முறை நேரில் கண்டால் ஒரு கோவில் கட்டியதற்கு சமம் என நம்பப்படுகிறது. இந்த பொண் மக்கள் மீது தெளிக்கப்படும் பொழுது, பாவங்கள் நீங்கி மனது நிம்மதி அடையும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

Read Entire Article