ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட ப்ளூ சூட்கேஸ்.. உள்ளே இளம்பெண் சடலம்.. பரபர

11 months ago 10
ARTICLE AD

பெங்களூருவில் உள்ள ரயில் நிலையம் ஒன்றின் அருகே கிழிந்த நிலையில் ப்ளூ சூட்கேஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காலல்துறை சந்தேகிக்கிறது.

ப்ளூ சூட்கேஸில் இளம்பெண் சடலம்:

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதை தொடர்ந்து, கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு புறநகரில் உள்ள பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே உள்ளூர்வாசிகளால் சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. அதில், இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்துள்ளது. அது ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ரயில் நிலையம் அருகே பரபரப்பு:

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த உடல் ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. உடலில் எந்த அடையாள ஆவணமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தப் பெண்ணின் பெயர், வயது மற்றும் அவர் எங்கிருந்து வந்தார் போன்ற விவரங்களைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம்" என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் (பெங்களூரு புறநகர்) சி.கே. பாபா பேசுகையில், "நாங்கள் எங்கள் விசாரணையைத் தொடங்கினோம். ரயிலில் இருந்து சூட்கேஸ் வீசப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்டிருக்கலாம்.

இதுபோன்ற வழக்குகள் பொதுவாக ரயில்வே காவல்துறையின் அதிகார வரம்பிற்குள் வந்தாலும், இந்த சம்பவம் எங்கள் பகுதியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதால் நாங்கள் இதுகுறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளோம்.

சூட்கேஸில் உடல் மட்டுமே இருந்தது. அடையாள அட்டையோ அல்லது தனிப்பட்ட உடைமைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. அந்தப் பெண்ணுக்கு குறைந்தது 18 வயது இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், அவரது அடையாளம் தெரியவில்லை" என்றார்.

கடந்த மார்ச் மாதம், இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. பெங்களூருவின் ஹுலிமாவுவில் உள்ள வீட்டில், 32 வயதுடைய கௌரி அனில் சம்பேகர் என்ற பெண்ணின் உடல் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

Read Entire Article