ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!

3 months ago 10
ARTICLE AD

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் இதுவரை ஆறு பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்திருக்கும் சூழலில், ஓ.பி.எஸ்-சின் மகனும், அவருடைய ஆதரவாளர்களும் த.வெ.க-வில் இணையப் போவதாக வெளியாகும் தகவலால் பரவலாக பேசப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வில் மீண்டும் இணைய, பல வழிகளில் முயன்றும் முடியாததால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மகனுடனும், ஆதரவாளர்களுடனும் தி.மு.க-வில் இணைந்தார். இணைந்தும் இதுவரை மகன் ரவீந்திரநாத்துக்கோ, அவருடைய ஆதரவாளர்களுக்கோ எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தியில் இருக்கும் அவர்கள் த.வெ.க-வுக்குத் தாவத் தயாராகிவருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துப் பேசிய த.வெ.க-வினர் சிலர், “தி.மு.க-வில் சேருவதற்கு முன்பே த.வெ.க-வில் சேருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தார் ஓ.பி.எஸ். குறிப்பாக, செங்கோட்டையனுடன் அதிக நெருக்கத்தில் இருந்தார். ஆனால், கடைசிநேரத்தில் சபாநாயகர் பதவி, மகனுக்கு எம்.பி சீட் என்கிற ஆசையைக் காட்டி தி.மு.க-வினர் அவரைக் கட்சியில் சேர்த்துக்கொண்டனர்.

அவரே எதிர்பார்க்காத வகையில், தற்போது த.வெ.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது, ஓ.பி.எஸ்-ஐ யோசிக்கவைத்திருக்கிறது. ஏற்கனவே தேனி மாவட்ட அ.தி.மு.க-வில் இருந்தவர்கள் த.வெ.க-வுக்குள் வந்து தனிக் கோஷ்டியாகவே செயல்பட்டு வருகிறார்கள். இப்போது இவர்களும் வந்தால், ஆரம்பத்திலிருந்தே கட்சிக்குள் இருக்கும் எங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும். கட்சித் தலைமை எங்களிடம் இது பற்றிக் கலந்தாலோசிக்காமல் மாற்றுக் கட்சியினரைச் சேர்ப்பதால், கீழ்மட்டத்தில் இருக்கும் நாங்கள்தான் பாதிக்கப்படுகிறோம்” என்றனர்.

இது குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாவது“ஓ.பி.எஸ் தி.மு.க-வில் இணைந்த பிறகு தேனி மாவட்டத்தில் அவரது செல்வாக்கு அதிகரித்தாலும், அவரின் ஆதரவாளர்களுக்கும், மகன் ரவீந்திரநாத்துக்கும் எதிர்பார்த்த அரசியல் முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இதனால், ரவீந்திரநாத் தலைமையில் ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள் த.வெ.க-வில் இணையத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தி.மு.க-வுக்குச் சென்றதற்காகப் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் கட்சி மாறினால் தனது நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்று தயக்கம் காட்டுவதோடு, ‘நீங்கள் வேண்டுமானால் அங்கு செல்லுங்கள்; செங்கோட்டையனிடம் பேசி உங்களுக்கு வேண்டியதைச் செய்யச் சொல்கிறேன்’ என கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து ஓ.பி.எஸ்-ஸின் மகன் உட்பட அவரின் ஆதரவாளர்கள் த.வெ.க-வுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது என பேசப்படுகிறது.

Read Entire Article