ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!

2 weeks ago 4
ARTICLE AD

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று ஸ்கோடா. இவர்களின் கார்களுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. உலகம் முழுவதும் மின்சார கார்களுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு சந்தையில் இருந்து வருகிறது. இதையடுத்து, முன்னணி கார் நிறுவனங்கள் அனைத்து மின்சார கார் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.

ஸ்கோடாவின் புதிய மின்சார கார்:

இந்த நிலையில், ஐரோப்பிய சந்தையில் தனது புதிய மின்சார காரான Skoda Epiq Sportline காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். இதன் டாப் வேரியண்ட் 55 டெவெலப்ஸ் 208 எச்பி குதிரை ஆற்றல் கொண்டதாக அறிமுகமாகியுள்ளது. இந்த கார் இரண்டு முன்பக்க வீல் டிரைவ் காராக அறிமுகமாகியுள்ளது.

பேட்டரி வேரியண்ட்:

இதன்  தொடக்க வேரியண்ட் 38.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் டாப் வேரியண்ட் 55 கிலோவாட் பேட்டரி வேரியண்டாக அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் வேரியண்டில் எல்எஃப்பி வேரியண்ட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இரண்டாவது வேரியண்டில் என்எம்சி பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

முதல் வேரியண்ட் 133 எச்பி குதிரை ஆற்றல் கொண்டதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது வேரியண்ட் 208 எச்பி குதிரை ஆற்றல் கொண்டதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வேரியண்ட் 267 என்எம் டார்க் இழுதிறனும், இரண்டாவது வேரியண்ட் 290 என்எம் டார்க் இழுதிறனும் உள்ளது.

440 கி.மீட்டர் மைலேஜ்:

38.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 310 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. டாப் வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 440 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. டாப் வேரியண்ட் 7.1 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது. டிசி சார்ஜிங்கில் முதல் வேரியண்ட் 23 நிமிடங்களிலும், டாப் வேரியண்ட் 24 நிமிடங்களிலும் 80 சதவீதம் ஏறும் ஆற்றல் கொண்டது.

வசதிகள்:

இந்த இரு வேரியண்டும் ஆட்டோமெட்டிக் வேரியண்டாக அறிமுகமாகியுள்ளது. இந்த இரு வேரியண்டிலும் அதிகபட்சமாக 160 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த கார் 4 ஆயிரத்து 171 மி.மீட்டர் நீளமும், 1798 மி.மீட்டர் அகலமும், 1581 மி.மீட்டர் உயரமும் கொண்டது. 5 இருக்கைகள் கொண்ட காராக இந்த கார் அறிமுகமாகியுள்ளது.  475 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. இந்த காரில் 19 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் 360 டிகிரி கேமரா சிஸ்டம், 10 ஸ்பீக்கர் கேன்டன் ஆடியோ சிஸ்டம், ரிமோட் பார்க்கிங், ரிவர்ஸ் அசிஸ்ட் வசதி உள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் எப்போது அறிமுகமாகும்? என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Read Entire Article