அன்னம் தரும் அமுத கரங்கள்

சென்னை கொளத்தூர் மேற்கு பகுதியான செங்கல்வராயன் தெரு மற்றும் ஜி.கே.எம்.காலணி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் காந்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்வில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி பேசியதாவது ;

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், சுவாமி அவரை பெயரிட்டு எப்போதும் கூப்பிட மாட்டேன் சுவாமி என்றுதான் கூப்பிடுவேன். அவர் அன்னம் தரும் அமுதக் கரங்கள் பெயரில் ஒரு நாளைக்கு ஆயிரம் நபர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார். அதனை பார்க்கும் போது எனக்கே சாப்பிடுணும் போல் உள்ளது. கல்யாண வீட்டில் கூட இந்த அளவுக்கு தரமான உணவு தருவார்களா என தெரியவில்லை எனவும் சாமி அவர்கள் தளபதி மனதில் இருக்கிறார் எனவும் தெரிவித்தார். 50 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன் தலைவர் என்ன நினைக்கிறார் என்பதை பொறுத்து செயல்படுவேன். ஆனால் இவரை பார்க்கும்போது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இது போல் யாராலும் பண்ண முடியாது போல் செயல்படுகிறார்.

நமது முதலமைச்சர் முன் மாதிரியாக செயல்பட்டு மாநிலத்துக்காக போராடி வெற்றி பெற்று தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவே பாராட்டு தெரிவித்து வருகிறது. அப்படிப்பட்ட அவர் மனதில் இவர் இருக்கிறார். இவர் இடம் எந்த பொறுப்பு கொடுத்தாலும் தலைவர் நினைப்பதை கூட அதிக அளவு செயல்படுபவர் என கூறினார்.

எனக்கு என்ன ஹேப்பி என்றால் , என் வாழ்க்கையில் இது ஒரு மைல்கள் சாமி அவர்கள் முதலமைச்சர் தொகுதியில் இந்த நிகழ்வில் பங்கேற்க என்னை அழைத்தற்கு அவருக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விமர்சனம் செய்தது குறித்தான கேள்விக்கு,

இல்லை இல்லை இது தான் தப்பு, ஒரு தராதரம் இருக்கிறது. முதலில் அவர் யார் என சொல்லுங்கள் எனவும் அவரை பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். அவர் எத்தனையோ ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல நடிகர் எந்த குறையும் சொல்ல மாட்டோம் , அய்யய்யோ ஃபர்ஸ்ட் கிளாஸ் நடிகர் அப்படியே தலையை அப்படி காட்டி இப்படி காட்டி நடிப்பார் என ஆக்சன் செய்து காட்டினார்.

சினிமா வேறு , ஆனால் இது அரசியல் அவர் பொதுமக்களுக்காக என்ன பண்ணார் என நீங்களே சொல்லுங்கள், நான் சொல்லவில்லை எனவும் அதன் பிறகு அவர் கூறுவதற்கு நான் பதில் சொல்கிறேன் எனவும் தெரிவித்தார்.