"ஒரு File தான் ஓபன் பண்ணியிருக்கோம்" இன்னும் பல File இருக்கு - சி.டி.ஆர் நிர்மல் குமார்

3 days ago 3
ARTICLE AD

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ஆர் நிர்மல் குமார் ;

தேனி சிறையில் இருந்த 17 பேர் தப்பியுள்ளனர். அதில் 4 பேர் பிடிபட்டுள்ளனர். தப்பியவர்களை பிடிக்க தேடுதல் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கிறதா என்பது குறித்து டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஊழல் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பார்டி ஃபண்ட் வாங்கியதற்காக ஒரு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டிக்கிருக்கிறார். இது திமுகவுக்கு பெரிய அவமானம். ஃபைலை ஓபன் செய்யுங்கள் என முன்னாள் துணை முதல்வர் சொல்லிக் கொண்டு இருந்தார். ஒரு ஃபைலை தான் ஓபன் செய்திருக்கிறோம். ஊழல் செய்ததற்கு திமுக வெட்கப்பட வேண்டும்.

கரூரில் என்ன திட்டமிட்டனர் ?

நேற்று நீதிமன்றத்தில் , கரூரில் போட்டிருக்க வேண்டும் என திமுகவினர் கோஷமிடுகின்றனர். அப்படி என்றால் கரூரில் என்ன திட்டமிட்டனர் ? திட்டமிடல் இல்லாமல் அந்த வார்த்தை வந்திருக்காது. அவர்கள் என்ன திட்டமிட்டார்களோ , அவர்களையும் மீறி உணர்ச்சிவசப்பட்டு வெளியே பேசியுள்ளனர்.

2 - ஜி விவகாரத்தில் எத்தனை பேர் மறைந்தனர், எத்தனை பேர் மாயமாகினர் என அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக் காலத்தில் மாயமானவர்கள் பல பேர். வெட்கமில்லாமல் நாங்கள் பழி வாங்குகிறோம் என ஸ்டாலின் கூறுகிறார். யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது.

முதல்வரிடம் பல ஃபைல்கள் இருக்கின்றன. எங்கெங்கு முறைகேடுகள் நடந்திருக்கிறதோ அங்கெல்லாம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் அகிலன் தற்கொலை வழக்கு தொடர்பாக காவல் துறை தரப்பில் விரிவான விசாரணை நடத்தி இருக்கின்றனர். யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.

"மின் கட்டணத்தில் தவறு - ஆய்வு கூட்டம்"

ரூப் டாப் சோலார் அமைப்பதற்கு 27 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. மார்ச் மாதத்துக்குள் 1 லட்சம் வர வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். சென்னை திருமழிசை மின் மயானத்தில் மின்தடை ஏற்படவில்லை. நகராட்சிக்கு உட்பட்ட மின் மயானத்தில் இருக்கக் கூடிய கேபிள்களில் பிரச்சினை இருந்தது.

நிலை கட்டணம் தொடர்பாக அரசு ஆலோசனை செய்து கொண்டு இருக்கிறது. மின் கட்டணத்தில் தவறு நடக்காமல் இருக்க தொடர்ச்சியாக ஆய்வு கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம். மத்திய பொதுத் தொகுப்பில் இருந்து தான் அதிக மின்சாரம் வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.

மின்மிகை மாநிலம் என்பது கிடையாது. நம்முடைய சொந்த உற்பத்தி 5,300 மெகாவாட் மட்டும் தான். சொந்த உற்பத்தியில் அவர்கள் மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்வது தான் மின் மிகை மாநிலம் , அப்படி எங்கேயும் கிடையாது என்று அவர் கூறினார்.

Read Entire Article