ஒசூர் அருகே கெலவரப்பள்ளி அணை நீரில் 40 அடி உயர நுரை..நோய் தொற்று ஏற்படும் அபாயம்

1 year ago 7
ARTICLE AD
தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை பகுதியில் கனமழை பெய்து வருவதால் 4 ஆயிரத்துக்கும் மேல் கன அடி நீர் வரத்து உள்ளது. கார்நாடகா மாநிலம் நந்திமலை பகுதியில் உருவான நதி தமிழ்நாட்டுக்கு வரும் இடத்தில் இந்த அணை அமைந்துள்ளது. இதில் நீர் வழி பாதையில் அமைந்திருக்கும் பல்வேறு ஆலைகளின் கழிவுகள் கலப்பதால், துர்நாற்றம் வீசி, நோய் தொற்றுக்களை பரப்பும் நுரை உருவாகிறது. கடந்த ஒரு மாதமாக இந்த நுரை படிதல் இருந்து வருவதுடன், தற்போது சாலையிலிருந்து 40 அடி உயரத்துக்கு நுரை படிந்துள்ளது. இதன் காரணமாக இந்த சாலையை கடந்த பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நுரை காரணமாக விவசாய மண் பாதிக்கப்படுகிறது. இந்த அணை நீரை நம்பி மக்களில் வாழ்வாதாரமும் இருப்பதால் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இந்த விஷயத்தில் தண்ணீரில் மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Read Entire Article